• மாற்று திறனாளிகள் விருது.
- மாற்று திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பணிபுரிந்தவர்கள் / நிறுவனங்களுக்கு வழங்கப்படும் விருதுகளை பெற தகுதியுள்ளவர்கள் இணையதளத்தில் விண்ணப்பிக்குமாறு வேலூர் மாவட்ட ஆட்சி தலைவர் தெரிவித்துள்ளார்.
மாற்றுதிறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பணிபுரிந்தவர்கள் / நிறுவனங்களுக்கு கீழ்க்காணும் மாநில விருதுகள், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால், 03.12.2026 உலக மாற்றுத் திறனாளிகள் தினத்தன்று வழங்கப்படவுள்ளது.
|
வ. எண் |
விருதுகள் விவரம்
|
விருதுகள் எண்ணிக்கை |
விருது விவரம் |
|
1 |
சிறந்த பணியாளர் / சுயதொழில் புரிபவர் 1. கை, கால் பாதிக்கப்பட்டோர் (LD) அல்லது தொழுநோயிலிருந்து குணமடைந்தோர் (LC), 2.பார்வை திறன் பாதிக்கப்பட்டோர்(VI), 3. செவித் திறன் பாதிக்கப்பட்டோர்(HI), 4. அறிவுசார் குறைபாடுடையோர் (ID), 5. பேச்சு மற்றும் மொழித்திறன் குறைபாடு (SpLaD), 6. Developmental Disorder (புறவுலக சிந்தனையற்றோர்(ASD), குறிப்பிட்ட கற்றலில் குறைபாடு (SLD)], 7. மன நோய் (MI), 8. Disability caused due to blood disorder இரத்த உறையாமை அல்லது இரத்த ஒழுகு குறைபாடு (He), இரத்த அழிவுச்சோகை (Th), அரிவாளனு இரத்தச் சோகை (SCD)], 9. நாள்பட்ட நரம்பியல் பாதிப்பு திசு பண்முகக் கடினமாதல் (MS), நடுக்கு வாதம் (PD)], 10.பல்வகை குறைபாடு [Multiple Disabilities(MD)] |
10 விருதுகள் |
10 கிராம் எடையுள்ள தங்கப் பதக்கம் மற்றும் சான்றிதழ் |
|
2 |
ஹெலன் கெல்லர் விருது - (பார்வைத் திறன் மற்றும் செவித் திறன் குறையுடையோருக்கு கற்பிக்கும் சிறந்த ஆசிரியர்கள் – தலா ஒரு விருது) |
2 விருதுகள் |
10 கிராம் எடையுள்ள தங்கப் பதக்கம் மற்றும் சான்றிதழ் |
|
3 |
சிறந்த ஆசிரியர் – (அறிவுசார் குறைபாடுடையோருக்கு கற்பித்தல்) |
1 விருது |
10 கிராம் எடையுள்ள தங்கப் பதக்கம் மற்றும் சான்றிதழ் |
|
4 |
சிறந்த சமூகப் பணியாளர் |
1 விருது |
10 கிராம் எடையுள்ள தங்கப் பதக்கம் மற்றும் சான்றிதழ் |
|
5 |
மாற்றுத்திறனாளிகளுக்கு சேவை புரிந்த சிறந்த தொண்டு நிறுவனம் |
1 விருது |
10 கிராம் எடையுள்ள தங்கப் பதக்கம் மற்றும் சான்றிதழ் |
|
6 |
மாற்றுத்திறனாளிகளை அதிக அளவில் பணியமர்த்திய சிறந்த நிறுவனம் |
1 விருது |
10 கிராம் எடையுள்ள தங்கப் பதக்கம் மற்றும் சான்றிதழ் |
|
7 |
ஹெலன் கெல்லர் விருது - ஆரம்ப நிலை பயிற்சி மையங்களில் பயிலும் செவித் திறன் குறையுடையோருக்கு கற்பிக்கும் சிறந்த ஆசிரியர் |
1 விருது |
10 கிராம் எடையுள்ள தங்கப் பதக்கம் மற்றும் சான்றிதழ் |
|
8 |
ஆரம்ப நிலை பயிற்சி மையங்களில் பணியாற்றும் சிறந்த ஆசிரியர் (அறிவுசார் குறைபாடுடையோருக்கு கற்பிக்கும் சிறந்த ஆசிரியர்) |
1 விருது |
10 கிராம் எடையுள்ள தங்கப் பதக்கம் மற்றும் சான்றிதழ் |
|
9 |
மாற்றுத் திறனாளிகளுக்கு சிறப்பாக பணியாற்றிய ஓட்டுநர் மற்றும் நடத்துனர் |
2 விருதுகள் |
10 கிராம் எடையுள்ள தங்கப் பதக்கம் மற்றும் சான்றிதழ் |
|
10 |
பொதுக் கட்டடங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கான தடையற்ற கட்டமைப்புகளை ஏற்படுத்தியுள்ள சிறந்த அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் |
2 விருதுகள் |
10 கிராம் எடையுள்ள தங்கப் பதக்கம் மற்றும் சான்றிதழ் |
|
|
மொத்தம் |
22 விருதுகள் |
|
மேற்காணும் விருதுகளுக்கு விண்ணப்பிக்கும் விருதாளர்கள், “https://awards.tn.gov.in என்ற வலை தளத்தில் 22.10.2026 அன்று பிற்பகல் 5.00 மணிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. வலைத்தளத்தில் விண்ணப்பிக்காத விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.
மேலும், விண்ணப்பத்தின் இரண்டு நகல்களை 22.10.2026 அன்று பிற்பகல் 5.00 மணிக்குள் சம்பந்தப்பட்ட மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலரிடம் ஒப்படைக்குமாறு வேலூர் மாவட்ட ஆட்சி தலைவர் பி.எஸ்.லீலா அலெக்ஸ் தெரிவித்துள்ளார்.
Comments
Post a Comment