• வேலூர் மாநகராட்சி குப்பைகள் தரம் பிரித்தல் விழிப்புணர்வு.

  • வேலூர் மாநகராட்சியில் திடக்கழிவு மேலாண்மை விதிகள் 2026, குப்பைகளை தரம் பிரித்து வழங்குவது குறித்து நடைபெற்ற விழிப்புணர்வு கூட்டத்தில் வேலூர் மாவட்ட ஆட்சி தலைவர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றி, மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்களிடம் கோரிக்கைகளை கேட்டறிந்தார்.

                வேலூர் மாநகராட்சியில் திடக்கழிவு மேலாண்மை விதிகள் 2026, குப்பைகளை தரம் பிரித்து வழங்குவது குறித்து சாய்நாதபுரத்தில் நடைபெற்ற விழிப்புணர்வு கூட்டத்தில் வேலூர் மாவட்ட ஆட்சி தலைவர் பி.எஸ்.லீலாஅலெக்ஸ் கலந்து கொண்டு சிறப்புரையாற்றி, மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்களிடம் கோரிக்கைகளை கேட்டறிந்தார்.  மேலும், காய்கறி கழிவுகள் முதலான மக்கும் குப்பைகளை வீட்டிலேயே உரமாக்குவது குறித்த செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டு, மக்கும் குப்பை, மக்காத குப்பைகளில் இருந்து வருவாய் சேமிக்கும் திட்டம் குறித்து மகளிர் சுய உதவி குழுவிற்கு விழிப்புணர்வு வழங்கப்பட்டது.  அட்டைகள், பேப்பர்கள் மூலம் பணம் சேமித்து  சிறப்பாக செயல்பட்டு வந்த விருபாட்சிபுரத்தைச் சேர்ந்த தோழிகள் மகளிர் சுய உதவி குழுவுக்கு மாநகராட்சி மூலம் ரூ.3,450 மதிப்புள்ள இயற்கை நுண் உரம் தயாரிக்கப்படும் இயந்திரத்தை இலவசமாக வழங்கப்பட்டது. இதன் மூலம் இவர்கள் 15 நாட்களில் இயற்கை நுண் உரம் தயாரித்து விற்பனை செய்து வருவாய் ஈட்டலாம்.

தொடர்ந்து, மாவட்ட ஆட்சி தலைவர் வேலூர் மாநகராட்சி, சாய்நாதபுரத்தில் டெங்கு தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து ஆய்வு மேற்கொண்டு, கொசுப்புழு ஒழிப்பு பணியாளர்களிடம் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து கேட்டறிந்தார்.

அதனை தொடர்ந்து, வேலூர் மாநகராட்சி, சர்க்கார் தோப்பு, பாலாற்றங்கரையில் உள்ள குப்பைகளை பயோ மைனிங் முறையில் அகற்றம் செய்திடும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர், வேலூர் மாநகராட்சி, தாராபடவேடு ஹவுசிங் போர்டு பகுதியில் தூய்மை இந்தியா திட்டம் (நகர்ப்புறம்) 2.0-ன்கீழ் பழைய கழிவுகளை பயோ மைனிங் முறையில் அகற்றும் பணியை  பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தொடர்ந்து, பொன்னை தலைமை நீரேற்று நிலையத்தில் குடிநீர் அபிவிருத்தி பணிகள் குறித்து பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்நிகழ்வின்போது குடிநீர் அபிவிருத்தி பணிக்கான வறட்சி நிவாரண நிதி 2026-27ன்கீழ் ரூ.117 இலட்சத்தில் Vertical Turbine Pump பொருத்தப்படும் பணிகள் குறித்தும், ரூ.130 இலட்சத்தில் 18 ஆழ்துளை கிணறுக்கான மோட்டார் பம்புகள் 10 எண்ணிக்கை திறந்தவெளி கிணறு பம்புகள் அமைத்தல் பணி நடைபெற்று வருவதையும் ஆய்வு செய்தார். இப்பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தினார்.

            இந்த ஆய்வின்போது வேலூர் மாநகராட்சி ஆணையர் அ.கேத்திரின் சரண்யா, மாநகராட்சி கண்காணிப்பு பொறியாளர் கண்ணன், மாநகர நல அலுவலர் மரு.பிரதாப்குமார், வேலூர் வட்டாட்சியர் உதயகுமார், காட்பாடி வட்டாட்சியர் பாலசந்தர் உட்பட பலர் உடனிருந்தனர்.  

 

Comments

Popular posts from this blog

• 25 ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்த பொறியியல் மாணவிகள்.

• கீரை திருவிழா - மக்கள் நல சந்தை.

• ஆக்சிலியம் கல்லூரி போருக்கு எதிரான அமைதி பேரணி.