• வேலூர் எச்.ஐ.வி விழிப்புணர்வு மாரத்தான் போட்டி.
·
வேலூர் மாவட்டத்தில் எச்.ஐ.வி / எய்ட்ஸ்
விழிப்புணர்வு தீவிர பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக
கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான மாரத்தான் போட்டியை
(ரெட் ரன்) மாவட்ட ஆட்சி தலைவர் தொடங்கி வைத்தார்.
வேலூர் மாவட்டத்தில் எச்.ஐ.வி/எய்ட்ஸ் விழிப்புணர்வு தீவிர பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான மாரத்தான் போட்டியை (ரெட் ரன்) மாவட்ட ஆட்சி தலைவர் பி.எஸ்.லீலாஅலெக்ஸ் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திலிருந்து கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கத்தின் வழிகாட்டுதல்களின்படி மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அலுவலகத்தின் மூலம் கல்லூரி மாணவ, மாணவிகளிடையே எச்.ஐ.வி. / எய்ட்ஸ் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது. மாரத்தான் ஓட்டமானது மாவட்ட ஆட்சியரகம் முதல் நேதாஜி விளையாட்டு அரங்கம் வரையில் நடைபெற்றது. இம்மாரத்தான் ஓட்டப்போட்டியில் சுமார் 400 கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
இந்த மாரத்தான் ஓட்டப்போட்டியில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளையும், அடுத்தடுத்து வந்த 7 நபர்களுக்கும் ஆறுதல் பரிசுகளையும் மாவட்ட ஆட்சி தலைவர் வழங்கினார். மேலும், இப்போட்டியில் வெற்றிபெற்ற மாணவர்கள் மாநில மற்றும் தேசிய அளவில் நடைபெறும் போட்டிகளில் பங்கேற்பார்கள்.
இந்நிகழ்வின்போது மாவட்ட சுகாதார அலுவலர் மரு.விஜய் சந்திரன், இணை இயக்குநர் (மருத்துவ பணிகள்) மரு.சிவக்குமார், மண்டல திட்ட மேலாளர் (மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு பிரிவு, வேலூர்) செல்வி கீர்த்திகா உட்பட பலர் உடனிருந்தனர்.
Comments
Post a Comment