• முதல்வர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள்.
· முதல்வர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகளில் மாவட்ட அளவில் வென்ற வீரர், வீராங்கனைகளுக்கு ஆட்சியர் பதக்கங்களை வழங்கி பாராட்டினார்.
வேலூர் மாவட்டம், வேலூர், காட்பாடியில் தமிழ்நாடு அரசு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் முதல்வர் கோப்பைக்கான பல்வேறு விளையாட்டு போட்டிகள் கடந்த மாதம் 9-ஆம் தேதி துவங்கி நடைபெற்றது.
இதில் ஹாக்கி, வாலிபால், ஈட்டி எறிதல், ஓட்டபந்தயம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல் உள்ளிட்ட பல்வேறு வகையான போட்டிகள் நடத்தப்பட்டது. இதில் வென்றவர்களுக்கு வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் லீலாஅலெக்ஸ் பதக்கங்கள், சான்றுகளை வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு வழங்கி பாராட்டினார். இவ்விழாவில் திரளான மாணவ, மாணவிகள், பெற்றோர்கள், விளையாட்டு பயிற்சியாளர்கள் கலந்து கொண்டனர்.


Comments
Post a Comment