• தேசிய தன்னார்வ இரத்த தான தினம்.

  • தேசிய தன்னார்வ இரத்த தான தினத்தை முன்னிட்டு தன்னார்வமாக இரத்தம் வழங்கிய அமைப்பு மற்றும் அமைப்பாளர்களுக்கு கேடயம் மற்றும் பாராட்டு சான்றிதழ்களை வேலூர் மாவட்ட ஆட்சி தலைவர் வழங்கினார்.

வேலூர் மாவட்டம், அடுக்கம்பாறையில் உள்ள அரசு வேலூர் மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனையில் தேசிய தன்னார்வ இரத்த தான தினத்தை முன்னிட்டு, தன்னார்வமாக இரத்தம் வழங்கிய அமைப்பு மற்றும் அமைப்பாளர்களுக்கு கேடயம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வேலூர் மாவட்டஆட்சி தலைவர் பி.எஸ்.லீலா அலெக்ஸ், வழங்கினார்.  மேலும், இரத்த தான முகாமை தொடங்கி வைத்தார்.  இந்த  ஆண்டின் இரத்த தானத்தின் கருத்து “மனிதநேயத்தின் ஒரு துளி இரத்தம் கொடுங்கள், உயிர்களை காப்பாற்றுங்கள்“ என்ற உறுதிமொழியை அனைவரும் ஏற்றுக்கொண்டனர்.

பின்னர், மருத்துவமனையில் மனநலம் குன்றியோர் மீட்பு மற்றும் மறுவாழ்வு மையத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது சிகிச்சை பெறுவோரின்  சிகிச்சை முறைகள், உணவு பழக்கம், அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்தார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சி தலைவர் தெரிவித்ததாவது.

                வேலூர் மாவட்டம் மருத்துவ சிகிச்சைக்கு பெயர் பெற்ற மாவட்டம். வேலூர் மாவட்டம் மட்டுமின்றி சுற்றியுள்ள பல மாவட்டங்களின் தேவையையும், மருத்துவ தேவையை பூர்த்தி செய்து வருகிறது. எனவே இரத்த தானம் வழங்குவதில் ஒவ்வொருவரின் ஒத்துழைப்பும் அவசியம். தற்போது இளைஞர்கள் மத்தியில் இரத்த தானம் செய்தால் எனக்கு என்ன ஆகும், பாதிப்பு ஏற்படுமா என்ற கேள்வி உள்ளது. அந்த தயக்கத்தை போக்க வேண்டும். இங்கு வந்துள்ள அனைத்து சங்கங்களும், குழுக்களும் இந்த இரத்த தானம் என்ற உயரிய பணியை மேலும்  ஊக்குவித்து, பலரிடம் கொண்டு சேர்க்க விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். ஒருவரின் இரத்த தானம் ஒரு உயிரை காப்பாற்றுகிறது. எனவே இரத்த தானம் என்னும் உயரிய சேவையை மேற்கொள்ள வேண்டுமென  மாவட்ட ஆட்சி தலைவர் பி.எஸ்.லீலா அலெக்ஸ், தெரிவித்தார்.

இந்நிகழ்வில் மாவட்ட சுகாதார அலுவலர் மரு.விஜய் சந்திரன், அரசு வேலூர் மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனை முதல்வர் மரு.எஸ்.முத்துசித்ரா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

 

 

Comments

Popular posts from this blog

• 25 ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்த பொறியியல் மாணவிகள்.

• கீரை திருவிழா - மக்கள் நல சந்தை.

• ஆக்சிலியம் கல்லூரி போருக்கு எதிரான அமைதி பேரணி.