• தண்ணீர் பற்றாக்குறை இந்தியாவுக்கான பிரச்சினையாக உள்ளது.


 ·         தண்ணீர் பற்றாக்குறை தமிழகத்திற்கும், ஒட்டுமொத்த இந்தியாவுக்குமான பிரச்சினையாக உள்ளது.

   ·         இந்தியா இளைய சமுதாயத்திற்கு முறையான திறன் பயிற்சியும் வேலைவாய்ப்பும் வழங்கப்படாவிட்டால் அது பெரிய பிரச்சினையாகிவிடும்.

   ·         உரங்களுக்காக மத்திய அரசு 2.8 லட்சம் கோடி மானியமாகச் செலவிடுகிறது - இந்திய பொட்டாஷ் நிறுவன ஒருங்கிணைப்பாளர் ராஜீவ்ரஞ்சன்.

     வேலூர்: உணவு முறை பாதிப்பு அடையாமல் இருக்க உரங்களுக்காக மத்திய அரசு சுமார் 2.8 லட்சம் கோடியை மானியமாகச் செலவிடுகிறது என்று இந்திய பொட்டாஷ் நிறுவனத்தின்  தலைமைச் செயல் அலுவலரும், ஒருங்கிணைப்பாளருமான முன்னாள் ஐஏஎஸ் ராஜீவ் ரஞ்சன் பேசினார்.

     வேலூர் விஐடி வேளாண் கல்லூரி – ஐபிஎல் கிராமப்புற மேம்பாட்டு மையம் சார்பில் "மீள்திறன் கொண்ட விவசாய முறைகளை உருவாக்குவதற்கான காலநிலை மாற்றத்திற்கேற்ற திறன்மிக்க வேளாண்மை" என்ற தலைப்பில் நிலைத்தன்மை மாநாடு நடைபெற்றது.

     இந்திய பொட்டாஷ் நிறுவனத்தின் இந்திய பொட்டாஷ் நிறுவனத்தின்   தலைமைச் செயல் அலுவலரும், ஒருங்கிணைப்பாளருமான முன்னாள் ஐஏஎஸ் ராஜீவ் ரஞ்சன் பேசியதாவது:

     உலக வெப்பமயமாதல் மற்றும் எல் நினோ காரணமாக ஒழுங்கற்ற மழை பொழிவும், அதன் தொடர்ச்சியாக சீரற்ற மின்சாரம் விநியோகம் இருந்து வருகிறது.

    சில மாதங்களுக்கு முன்பு சர்க்கரை விலை உயர்ந்தது. உடனே சர்க்கரையை பதுக்கி வைத்து விற்பனை செய்வதை தடுக்கும் வகையில் சர்க்கரையின் மொத்த இருப்பின் மீது அரசு கட்டுப்பாடுகளை விதித்தது.

    கரும்பில் இருந்து கிடைக்கும் 1 கிலோ சர்க்கரைக்கு நாம் அதிகம் நீரை செலவிட வேண்டியுள்ளது. இது அரிசியை விட அதிகமாகும். எனவே, தண்ணீர் பற்றாக்குறை என்பது தமிழகத்திற்கும், ஒட்டுமொத்த இந்தியாவுக்குமான பிரச்சினையாக உள்ளது.

     சர்வதேச புதுமை கண்டுபிடிப்பு குறியீடு பட்டியலில், இந்தியா 15 ஆண்டுகளுக்கு முன்பு 81-வது இடத்தில் இருந்தது. 2025-ல் 38-வது இடத்துக்கு முன்னேறி உள்ளது. இந்தப் பட்டியலில் இந்தியா முதல் 10 இடங்களில் வர வேண்டும்.

     ஆராய்ச்சிக்கு சுமார் 2.55 லட்சம் கோடியை இந்தியா ஒதுக்குகிறது. இந்தியா மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.8 சதவீத தொகையை மட்டும் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கு ஒதுக்குகிறது.

    இந்தியாவின் மொத்த ஜிடிபி-யில் விவசாயத்தின் பங்களிப்பு 18 சதவீதமாகும். விவசாயத்தில் ஈடுபடும் மக்கள் தொகை 45 முதல் 50 சதவீதமாக உள்ளது. விவசாயத்தில் சராசரி வருமானம் மூன்றில் ஒரு பங்கு மட்டுமே. அதாவது 50 சதவீத மக்கள் தொகையின் 15 சதவீதம் பலன் தரும் வேலைகளை செய்கின்றனர்.

  விவசாயம் மற்றும் வாழ்க்கை முறை நிலைத்தன்மையுடன் இல்லாவிட்டால்   பிரச்சினையாகிவிடும்.

     உரங்களுக்காக மத்திய அரசு சுமார் 2.8 லட்சம் கோடியை மானியமாகச் செலவிடுகிறது. இது நம் உணவு முறை பாதிக்கப்படாமல் இருக்க தேவைப்படுகிறது.

    இந்தியா தனது ஜிடிபியில் 0.8 சதவீதத்தை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கு செலவிடுகிறது, ஆனால் சீனா 2.7 சதவீதமும், அமெரிக்கா 3.4 சதவீதமும், ஜப்பான் 3.5 சதவீதமும் செலவிடுகின்றன. ஆராய்ச்சிக்கு அதிக நிதி ஒதுக்கிட வேண்டும்.

    இந்தியா இளைய சமுதாயத்திற்கு முறையான திறன் பயிற்சியும் வேலைவாய்ப்பும் வழங்கப்படாவிட்டால் அது பெரிய பிரச்சினையாகிவிடும்.

   விவசாயிகள் நவீன உலகின் படைப்பாளிகள். ஆனால் உற்பத்திப் பொருட்களுக்குப் பின்னால் இருக்கும் அவர்களின் கடின உழைப்பையும் வியர்வையையும் நாம் மதிப்பதில்லை. நமது அறிவு, தொழில்நுட்பம், விவசாயம் மற்றும் வேலைவாய்ப்பு குறித்த இந்த பெரிய சவால்களை நாம் எதிர்கொண்டு முறையான தீர்வுகளைக் காண வேண்டும்.

     இவ்வாறு அவர் பேசினார்.

  மாநாட்டுக்கு முன்னிலை வகித்து, விஐடி துணை தலைவர் சங்கர்விசுவநாதன் பேசுகையில், “உலகில் எத்தனை புதிய தொழில்நுட்பங்கள் மாறினாலும் விவசாயம் அப்படியே தான் இருக்கும். மத்திய அரசின் 20223-24ம் ஆண்டில் வெளியான பொருளாதார ஆய்வறிக்கையில் விவசாய துறை 42 சதவீதம் பங்களிப்பை தருகிறது. மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 18 சதவீதமாக உள்ளது. இந்தியாவில் இருந்து கோதுமை, உருளைக்கிழங்கு, வெங்காயம் ஆகியவற்றை உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறோம். விவசாய உற்பத்தியில் சீனாவும் முன்னோடியாக உள்ளது.

     இந்தியா முழுவதும் காலநிலை மாற்றத்தால் வெப்பநிலை உயர்ந்து கொண்டிருக்கிறது. எனவே பருவத்திற்கு ஏற்ப விவசாயிகள் பயிர்களை பயிரிட வேண்டும். நெல், கரும்பு ஆகிய பயிர்களுக்கு நீர் அதிகம் தேவை. எனவே காலநிலை மாற்ற காலங்களில் பருவநிலைக்கு ஏற்ப அனைத்து வகை பயிர்களை பயிரிட வேண்டும். இதன் மூலம் ஆண்டுதோறும் விவசாயம் செய்ய முடியும்” என்றார்.

     தமிழ்நாடு வேளாண்மை பல்கலைகழகத்தின் பேராசிரியர் அர்த்தநாரி முரளி பேசுகையில், காலநிலை மாற்றத்தில் வெப்ப நிலை உயர்ந்துள்ளது. இதனால் மழைப்பொழிவில் மாற்றம், மண்ணுக்கு கிடைக்கும் ஈரப்பதம், பயிருக்கான சத்து ஆகியவை கிடைக்காமல் பாதிப்பு ஏற்படுகிறது. தமிழகம் 5 ஆயிரம் முதல் 6 ஆயிரம் ஹெக்டர் பரப்பளவில் மட்டும் இயற்கை வேளாண்மை செய்கிறது. ஆனால் ஆந்திரா 2.90 லட்சம் ஹெக்டரில் இயற்கை விவசாயம் செய்கிறது. குஜராத் மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களும் அதிகளவில் இயற்கை விவசாயம் செய்கின்றன” என்றார்.

     மாநாட்டு ஒருங்கிணைப்பாளர் கே.மோகன்ராஜ் வரவேற்றார். வேளாண் கல்லூரி முதன்மையர் ஆர்.ராஜேந்திரன் மாநாட்டின் நோக்கம் குறித்து பேசினார். விஐடி இணை துணைவேந்தர் பார்த்தசாரதி மல்லிக், பதிவாளர் டி.ஜெயபாரதி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். இணைபேராசியர் ஆனிஜெனிபர் நன்றி கூறினார். மாநாட்டில் 300-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனர்.

 

Comments

Popular posts from this blog

• 25 ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்த பொறியியல் மாணவிகள்.

• கீரை திருவிழா - மக்கள் நல சந்தை.

• ஆக்சிலியம் கல்லூரி போருக்கு எதிரான அமைதி பேரணி.