• குடியாத்தம் நகராட்சி, ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் ஆய்வு.
- குடியாத்தம் நகராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து வேலூர் மாவட்ட ஆட்சி தலைவர் ஆய்வு.
வேலூர் மாவட்டம், குடியாத்தம் நகராட்சியில் பேருந்து நிலைய கட்டுமான பணிகள், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி குளேரினேசன், குப்பைகள் தரம் பிரித்து வழங்குவது, குடியாத்தம் ஊராட்சி ஒன்றியத்தில் ஆரம்ப சுகாதார நிலையம் ஆகிய இடங்களில் வேலூர் மாவட்ட ஆட்சி தலைவர் பி.எஸ்.லீலாஅலெக்ஸ் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மாவட்ட ஆட்சி தலைவர் குடியாத்தம் நகராட்சி, குடியாத்தம் பழைய பேருந்து நிலையத்தில் ரூ.95 இலட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் வணிக வளாகம், பேருந்து நிலையத்தின் தரைதளம், மின்விளக்குகள், கால்வாய் போன்றவற்றின் பணிகளை பார்வையிட்டு அய்வு செய்தார். மேலும், பாலூட்டும் தாய்மார்கள் அறை, கழிவறைகள் பராமரிப்பு குறித்து பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தொடர்ந்து குடியாத்தம் நகராட்சி, சந்தபேட்டையில் உள்ள 23 இலட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் குளேரினேசன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதை பார்வையிட்டு ஆய்வு செய்து, தரைமட்ட நீர் சுத்திகரிப்பு அறை மற்றும் மின் இணைப்பான் அறை ஆகியவற்றை பார்வையிட்டார்.
அதனை தொடர்ந்து குடியாத்தம் நகராட்சி, சந்தபேட்டையில் தூய்மை பணியாளர்கள் பொதுமக்களிடம் குப்பைகளை தரம் பிரித்து சேகரிப்பது குறித்து பார்வையிட்டு ஆய்வு செய்து, தூய்மை பணியாளர்களிடம் பாதுகாப்பு உபகரணங்கள், பொதுமக்கள் குப்பைகளை முறையாக தரம் பிரித்து வழங்குகிறார்களா என கேட்டறிந்தார். மேலும், பொதுமக்களிடம் அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்து, குப்பைகளை தரம் பிரித்து வழங்கிடுமாறும், வீடுகளில் தண்ணீர் தேங்காதவண்ணம் பார்த்து கொள்ளுமாறும் அறிவுறுத்தினார். டெங்கு தடுப்பு குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
பின்னர், குடியாத்தம் ஊராட்சி ஒன்றியம், போஜனாபுரம் ஊராட்சி, சீவூராம்பட்டியில் உள்ள 30,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்தேக்க தொட்டியில் குளேரினேசன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தொடர்ந்து, குடியாத்தம் ஊராட்சி ஒன்றியம், போஜனாபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை பார்வையிட்டு ஆய்வு செய்து, பொதுமக்களிடம் முறையாக சிகிச்சை வழங்கப்படுகிறதா என கேட்டறிந்தார். மருந்துகளின் இருப்பு குறித்து ஆய்வு செய்தார். மேலும், வருகை பதிவு, பணியாளர்களின் எண்ணிக்கை, பதிவேடுகளை ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின்போது ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் பிரியா, மாவட்ட சுகாதார அலுவலர் மரு.விஜய்சந்திரன், குடியாத்தம் வருவாய் கோட்டாட்சியர் செந்தில்குமார், குடியாத்தம் நகராட்சி ஆணையர் தனலட்சுமி, வட்டாட்சியர் பிரியா, வட்டார வளர்ச்சி அலுவலர் ஹேமலதா உட்பட பலர் உடனிருந்தனர்.

Comments
Post a Comment