• தேசிய மீன்வள டிஜிட்டல் தளத்தில் பதிவு செய்தல்.
- தேசிய மீன்வள டிஜிட்டல் தளத்தில் பதிவு செய்தல்.
வேலூர், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை, உதவி இயக்குநர் அலுவலக கட்டுப்பாட்டிலுள்ள வேலூர், இராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை மாவட்டங்களிலுள்ள அனைத்து மீனவர் மற்றும் மீனவ மகளிர் கூட்டுறவு சங்கங்களின் உறுப்பினர்கள் மற்றும் தமிழ்நாடு மீனவர் நலவாரிய உறுப்பினர்களுக்காக இலவசமாக செயல்படுத்தப்படும் குழு விபத்து காப்பீடு திட்டத்தின்கீழ் பயன்பெற ஏதுவாக மேற்குறிப்பிட்ட தகுதியுள்ள அனைவரும் தங்களது பெயர்களை தேசிய மீன்வள டிஜிட்டல் தளத்தில்(NFDP-National Fisheries Digital Platform) பதிவு செய்தல் கட்டாயமாகும். இது தொடர்பாக கீழ்காணும் மீன்வள அலுவலர்களைஅணுகி தங்கள் பெயர்களை நவம்பர் மாத இறுதிக்குள் NFDP இணையதளத்தில் பதிவு செய்திடுமாறு மாவட்ட ஆட்சி தலைவர் பி.எஸ்.லீலாஅலெக்ஸ் தெரிவித்துள்ளார்.
சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள்
ஆதார் எண்
வங்கி கணக்கு புத்தக நகல்
கைப்பேசி எண்(ஆதாருடன் இணக்கப்பட்டது)
தொடர்புக்கு
மீன்வள ஆய்வாளர் - திரு.மூ.கனகராஜ்-9884868583
மீன்வள ஆய்வாளர்- செ.கணபதி-7845947040
மீன்வள சார் ஆய்வாளர்- திரு.பா.விவேக்-9442773118
Comments
Post a Comment