• டி.டி.மோட்டூர் ஊராட்சி மனுநீதி நாள் முகாம்

  • டி.டி.மோட்டூர் ஊராட்சி மனுநீதி நாள் முகாம் – மாவட்ட ஆட்சி தலைவர் 117 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 69 இலட்சத்து  14  ஆயிரத்து 606  மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

வேலூர் மாவட்டம், பேர்ணாம்பட்டு வட்டம், டி.டி.மோட்டூர் ஊராட்சியில்  மனுநீதி நாள் முகாம் மாவட்ட ஆட்சி தலைவர் பி.எஸ்.லீலாஅலெக்ஸ் தலைமையில் நடைபெற்றது.

இந்த மனுநீதி நாள் முகாமில் 117 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 69 இலட்சத்து 14 ஆயிரத்து 606 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சி தலைவர் வழங்கினார். டி.டி.மோட்டூர் ஊராட்சியில் ஏற்கனவே பெறப்பட்ட 209 மனுக்களில் 117 மனுக்கள் ஏற்கப்பட்டன. 92 மனுக்கள் பரிசீலனையில் உள்ளன. இந்த மனுநீதி நாள் முகாமில் பொதுமக்கள் 154 கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சி தலைவர்-டம் வழங்கினார்கள்.

முன்னதாக மாவட்ட ஆட்சி தலைவர் இந்த மனுநீதி நாள் முகாமில் பல்வேறு அரசு துறைகளின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த கண்காட்சி அரங்குகளை பார்வையிட்டார். 

                 இம்முகாமில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையின் சார்பில் 56 பயனாளிகளுக்கு ரூ.1,61,37,000/- மதிப்பிலான இலவச வீட்டுமனைப் பட்டாக்களும், 1 பயனாளிக்கு ரூ.8,000/- மதிப்பில் திருமண உதவி தொகையும், 5 பயனாளிகளுக்கு ரூ.1,12,500/- மதிப்பில் இயற்கை மரணம் ஈமச்சடங்கு நிதி உதவி தொகையும், 1 பயனாளிக்கு ரூ.2,750/- மதிப்பில் கல்வி உதவித்தொகையும், 9 பயனாளிகளுக்கு உட்பிரிவு பட்டா மாறுதல் சேவைகளும், 1 பயனாளிக்கு பட்டா மாற்றமும், 9 பயனாளிகளுக்கு புதிய மின்னணு குடும்ப அட்டைகளும்,  மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 7 மாற்று திறனாளிகளுக்கு ரூ.1,09,200/- மதிப்பிலான நலத்திட்ட உதவிகளும்,  தமிழ்நாடு மின் உற்பத்தி (ம) பகிர்மான கழகத்தின் சார்பில் 1 பயனாளிக்கு ரூ.7,000/- மதிப்பில் மின் இணைப்பும், தோட்டக்கலை துறையின் சார்பில் 1 பயனாளிக்கு ரூ.60,000/- மதிப்பில் நிரந்த கல் பந்தல் அமைப்பதற்கும், 1 பயனாளிக்கு ரூ.77,556/- மதிப்பில் சொட்டுநீர் பாசனம் அமைப்பதற்கும், 1 பயனாளிக்கு ரூ.12,000/- மதிப்பில் வீரிய ரக காய்கறி பயிர்களும், வேளாண்மை நலத்துறையின் சார்பில் 2 பயனாளிகளுக்கு ரூ.4,600/- மதிப்பில் நெல் விதை தொகுப்பும், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின்கீழ் 22 பயனாளிகளுக்கு ரூ.44,000/- மதிப்பில் ஊட்டச்சத்து பெட்டகங்களும், மாற்று திறனாளி குழுக்களுக்கு ரூ.3,00,000/- மதிப்பில் வங்கி கடனுதவிகளும், மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ.40,000/- மதிப்பில் வங்கி கடனுதவிகளும் என மொத்தம் 117 பயனாளிகளுக்கு ரூ.1,69,14,606/- மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

                இந்நிகழ்ச்சியில் குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் க.சிந்து, மாவட்ட வருவாய் அலுவலர் மரு.து.சுரேஷ், தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி) சி.மாறன், மாவட்ட சுகாதார அலுவலர் மரு.விஜய் சந்திரன், மாவட்ட மாற்று திறனாளிகள் நலத்துறை அலுவலர் பாபு, துறை சார்ந்த அலுவலர்கள், குடியாத்தம் வருவாய் கோட்டாட்சியர் க.செந்தில்குமார், பேர்ணாம்பட்டு வட்டாட்சியர் தேவி, மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் செ.உத்திரகுமாரி செல்வம், டி.டி.மோட்டூர் ஊராட்சி மன்ற தலைவர் யு.அமிலா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

 

Comments

Popular posts from this blog

• 25 ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்த பொறியியல் மாணவிகள்.

• கீரை திருவிழா - மக்கள் நல சந்தை.

• ஆக்சிலியம் கல்லூரி போருக்கு எதிரான அமைதி பேரணி.