• வேலூரில் தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்க மாநாடு.

·         வேலூரில் தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்க மாநாடு.

  ·         கிராம உதவியாளர்களுக்கு வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க கோரிக்கை - மாநில தலைவர் திருமலைவாசன் பேட்டி.

             வேலூர் மாவட்டம், வேலூர் நகர அரங்கில் தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கத்தின் 3-ஆவது மாவட்ட மாநாடு மாவட்ட தலைவர் ஆதிகேசன் தலைமையில் நடைபெற்றது. இதில் மாவட்ட செயலாளர் சரவணன், முன்னாள் மாநில துணைதலைவர் ரவி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    இதில் மாநில தலைவர் திருமலைவாசன் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்.

    இதில் வேலூர், அணைக்கட்டு, காட்பாடி, கே.வி.குப்பம், குடியாத்தம், பேர்ணாம்பட்டு ஆகிய பகுதிகளை சேர்ந்த திரளான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    பின்னர் மாநில தலைவர் திருமலைவாசன் செய்தியாளர்களிடம் கூறுகையில், கிராம உதவியாளர்களுக்கு 24 மணி நேரமும் அனைத்து பணிகளிலும் நாங்கள் ஈடுபடுகிறோம். கிராம உதவியாளர்களுக்கு வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க கோரி கடந்த 50 ஆண்டு காலமாக கோரிக்கை வைத்து வருகிறோம். எந்த அரசும் எங்கள் கோரிக்கையை நிறைவேற்றவில்லை. இந்த அரசாவது நிறைவேற்றவேண்டும். அரசு ஊழியர் ‘டி’ பிரிவு பட்டியலில் கிராம உதவியாளர்களை சேர்த்திட வேண்டும். எங்கள் மாநில மாநாட்டில் முடிவின்படி அடுத்த கட்ட நடவடிக்கைகள் இருக்கும் என்று கூறினார்


Comments

Popular posts from this blog

• 25 ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்த பொறியியல் மாணவிகள்.

• கீரை திருவிழா - மக்கள் நல சந்தை.

• ஆக்சிலியம் கல்லூரி போருக்கு எதிரான அமைதி பேரணி.