• வேலூர் மாற்று திறனாளிகள் நல அலுவலக உதவி வரவேற்பாளர் பணியிடம்.
· வேலூர் மாவட்ட மாற்று திறனாளிகள் நல அலுவலகத்தில் காலியாக உள்ள உதவி வரவேற்பாளர் (Assistant Receptionist) பணியிடத்திற்கு தகுதியான மாற்று திறனாளிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது - வேலூர் மாவட்ட ஆட்சி தலைவர்.
வேலூர் மாவட்ட மாற்று திறனாளிகள் நல அலுவலகத்தில் காலியாக உள்ள உதவி வரவேற்பாளர் (Assistant Receptionist) பணியிடத்தினை நிரப்பிட ஏதுவாக, மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பு (பெண்) (MBC & DNC -(W)) என்ற இனசுழற்சி முறைப்படி, கீழ்காணும் நிபந்தனைகள் மற்றும் கல்வித் தகுதிகள் அடிப்படையில் பணியிடம் நிரப்பப்படவுள்ளது. இப்பணியிடத்திற்கான ஊதியம் ரூ.15,900/- முதல் ரூ.50,400/- (Level-2) வரை ஊதிய விகிதத்தில் தோற்றுவிக்கப்பட்டுள்ளது. எனவே, இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான மாற்றுத்திறனாளிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகிறது.
நிபந்தனைகள் மற்றும் கல்வித்தகுதிகள்
1. முழுமையாக பார்வையற்றவராக இருத்தல் வேண்டும் (100%)
2. எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
3. 40 வயதிற்குட்பட்டவராக இருத்தல் அவசியம்.
4. நாற்காலி ஒயர் பின்னுதலில் ஒரு வருட கால அனுபவம் பெற்றவராக இருத்தல் வேண்டும்.
தங்களது விண்ணப்பத்தில் சுய விவரங்களை பூர்த்தி செய்து, மாற்று திறனாளிகளுக்கான அனைத்து ஆவண நகல்கள் மற்றும் கல்வி சான்றுகளில் கையொப்பத்துடன் பாஸ்போர்ட் சைஸ் புகைப்படத்துடன் இணைத்து 30.10.2026-க்குள் வேலூர் மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் அமைந்துள்ள மாவட்ட மாற்று திறனாளிகள் நல அலுவலகத்தில் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ வழங்குமாறு கேட்டு கொள்ளப்படுகிறது. 30.10.2026 மாலை 06.00 மணிக்கு பிறகு பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளபடமாட்டது என்பதனை தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பாக, மேலும் தகவல்களுக்கு மாவட்ட மாற்று திறனாளிகள் நல அலுவலகம், மாவட்ட ஆட்சியரக வளாகம், சத்துவாச்சாரி, வேலூர் மாவட்டத்தினை அணுகுமாறும் அல்லது அலுவலக தொலைபேசி எண்.0416-2222737, 2902737 வழியாகவும் தொடர்பு கொள்ளுமாறு வேலூர் மாவட்ட ஆட்சி தலைவர் பி.எஸ்.லீலாஅலெக்ஸ் தெரிவித்துள்ளார்.
Comments
Post a Comment