• வேலூர் குழந்தைகள் அரிசியில் ‘அ’ எழுதி ஏடு துவக்கம்.


 ·         வேலூர் ஜலகண்டீஸ்வரர் ஆலயத்தில் சரஸ்வதி தேவி முன்னிலையில் குழந்தைகள் அரிசியில் ‘அ’ எழுதி ஏடு துவக்கம். 

       வேலூர் மாவட்டம், வேலூர் கோட்டையில் உள்ள ஸ்ரீ ஜலகண்டீஸ்வரர் ஆலயத்தில் விஜயதசமியை முன்னிட்டு ஆலயத்தில் உள்ள சரஸ்வதி தேவி அம்மன்  முன்னிலையில் பள்ளியில் குழந்தைகளை சேர்க்க உகந்த நாள் என்பதால் “ஏடு துவங்கும் நிகழ்ச்சி” நடைபெற்றது.

  இதில் வேதமந்திரங்கள் முழங்க குழந்தைகளின் பெற்றோர்கள் குழந்தைகளின் கைகளை பிடித்து அரிசியில் தங்க மோதிரம் கொண்டு ‘அ’ என்ற தமிழின் முதல் எழுத்தை எழுதி கல்வி கடவுளான சரஸ்வதியை வழிபட்டனர். பெற்றோர்கள் ஆர்வமுடன் குழந்தைகளை கொண்டு வந்து தங்க மோதிரத்தால் எழுத்துக்களை எழுதி கல்வி ஆரம்பமான வித்யாரம்பத்தை துவங்கினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Comments

Popular posts from this blog

• 25 ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்த பொறியியல் மாணவிகள்.

• கீரை திருவிழா - மக்கள் நல சந்தை.

• ஆக்சிலியம் கல்லூரி போருக்கு எதிரான அமைதி பேரணி.