• வடகிழக்கு பருவமழை கட்டுப்பாட்டு அறை எண்கள்
· வடகிழக்கு பருவமழை - கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண்கள்.
தமிழகத்தில் கடந்த 15.10.2026 முதல் வடகிழக்கு பருவமழை – 2026 பருவகாலம் தொடங்கியுள்ளது. இந்த வடகிழக்கு பருவமழை பருவ காலத்தில் தமிழகம் முழுவதும் பரவலாக நல்ல மழை பொழியும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதனடிப்படையில் வேலூர் மாவட்டத்தில் பெய்யும் மழையினால் ஏற்படும் இயற்கை இடர்பாடுகள் குறித்து பொதுமக்களிடமிருந்து புகார்கள் பெறும் வகையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் வட்டாட்சியர் அலுவலகங்களில் 24 மணிநேரமும் இயங்கும் வகையில் கட்டுப்பாட்டு அறைகள் செயல்பட்டு வருகின்றன.
இந்த கட்டுப்பாட்டு அறைகளில் மழை பொழிவினால் ஏற்படும் வீடுகள் சேதம், கால்நடைகள் சேதம், மனித உயிர்சேதம் மற்றும் மழையினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் சம்மந்தப்பட்ட வட்டாட்சியர் அலுவலகங்களில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறைகளுக்கு பொதுமக்கள் தகவல் தெரிவிக்கலாம். வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் வட்டாட்சியர் அலுவலகங்களில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறையில் பொதுமக்களிடமிருந்து புகார்களை பெறும் வகையில் தொலைபேசி எண்கள் வைக்கப்பட்டுள்ளன.
|
வ. எண் |
அலுவலகத்தின் பெயர் |
கட்டுப்பாட்டு அறையின் தொலைபேசி / அலைபேசி எண் |
|
1. |
மாவட்டஆட்சியர்அலுவலகம், வேலூர் |
1077, 0416-2258016 |
|
2. |
வட்டாட்சியர்அலுவலகம், வேலூர். |
0416 – 2220519 |
|
3. |
வட்டாட்சியர்அலுவலகம், அணைக்கட்டு |
0416 – 2276443 |
|
4. |
வட்டாட்சியர்அலுவலகம், காட்பாடி |
0416 – 2297647 |
|
5. |
வட்டாட்சியர்அலுவலகம், கே.வி.குப்பம் |
0416 – 2997219 |
|
6. |
வட்டாட்சியர்அலுவலகம், குடியாத்தம் |
04171 – 221177 |
|
7. |
வட்டாட்சியர்அலுவலகம், பேர்ணாம்பட்டு |
04171 – 292748 |
வேலூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை காலத்தில் மழை பொழிவினால் ஏற்படும் இயற்கை இடர்பாடுகள் குறித்து மேலே தெரிவிக்கப்பட்டுள்ளவாறு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் சம்மந்தப்பட்ட வட்டாட்சியர் அலுவலகங்களில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறையில் வைக்கப்பட்டுள்ள தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு பொதுமக்கள் தங்களது புகார்களை தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சி தலைவர் பி.எஸ்.லீலா அலெகஸ் தெரிவித்துள்ளார்.
Comments
Post a Comment