• சித்த மருத்துவ மாணவர்களுக்கு நாடி பார்ப்பது குறித்து பயிற்சி.
· நாடு முழுவதும் சித்த மருத்துவமனைகளை தனியாக தனியார் அமைக்க தற்போது தேசிய சித்த மருத்துவ நிறுவனம் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது
· சித்த மருத்துவம் பயின்ற மாணவர்களுக்கு நாடி பார்ப்பது குறித்து ஏலகிரியில் 300-பேருக்கு அக்டோபர் 11 முதல் 20 ஆம் தேதி வரையில் பயிற்சி அளிக்கப்படும்
· நாடு முழுவதும் சித்தா மருத்துவ லேப் பரிசோதனை மையங்களை ஏற்படுத்தி வருகிறோம் - தேசிய சித்த மருத்துவ இயக்குநர் டாக்டர் செந்தில்குமார் வேலூரில் பேட்டி.
வேலூர் மாவட்டம், வேலூரில், சண்முகனடியார் சங்க கட்டிடத்தில் புற்று மகரிஷி சமூக மருத்துவ மையம் மற்றும் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மற்றும் தேசிய சித்த மருத்துவ நிறுவனம் இணைந்து சித்த மருத்துவ முகாம் வணிகர் சங்க மாவட்ட தலைவர் ஞானவேலு தலைமையில் நடைபெற்றது.
இதில் சித்த மருத்துவ முகாமை தேசிய சித்த மருத்துவ நிறுவனத்தின் இயக்குநர் டாக்டர் செந்தில்வேல் துவங்கி வைத்தார். இதில் இம்காப்ஸ் இயக்குநர் டாக்டர். பாஸ்கரன், புதுச்சேரி மத்திய வானொலி நிலையம் மற்றும் மக்கள் தொடர்பகம் துணை இயக்குநர் சிவக்குமார், செல்வம் உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண்டனர். இதில் திரளான மக்கள் பங்கேற்றனர். அவர்களுக்கு இலவச மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு மருந்துகளும் வழங்கப்பட்டது.
பின்னர் தேசிய சித்த மருத்துவ நிறுவனத்தின் இயக்குநர் டாக்டர் செந்தில்வேல் செய்தியாளர்களிடம் கூறுகையில், வேலூர் மாவட்டத்தில் ஒருங்கிணைந்த சித்த மருத்துவ முகாம் நடத்துகிறோம். சித்தா மற்றுமின்றி பாரம்பரிய மருத்துவ பிரதிநிதிகள் வணிகர் சங்கங்களை புற்று மகரிஷி மையமும் இணைத்து மருத்துவ முகாமை நடத்துகிறோம். நோய் வந்த பிறகு ஆயுர்வதேம் சித்தா யுனானி பார்ப்பதா என்பது சால சிறந்தது அல்ல. சித்த மருத்துவத்தில் நாடி முறையை கணிக்கிறோம். நா நிறம், மொழி விழி ஆகியவைகள் மூலமும் நாடியை கணித்து என்ன வியாதி, அது தீரக்கூடியதா என்பதை கணிப்பது மட்டுமல்ல, ஐந்து வருடங்களுக்கு பிறகு என்ன நோய் வரும் என்பதையும் கணிக்க முடியும். இதன் மூலம் நோய் வரும் முன் தடுக்கலாம்
விடியற்காலை ஐந்து மணிக்கு சித்த மருத்துவத்தின் பரிசோதனையை துவங்குகிறோம். சூரிய உதயத்திற்கு முன்பாக மாணவர்களும் மருத்துவர்களும் இணைந்து சித்தா பாரம்பரிய முறைப்படியான ஆய்வகத்தை அந்தந்த மாவட்டத்தில் திறக்கின்றனர். இன்னும் வேலூரில் வரவில்லை விரைவில் வேலூரிலும் வரும்.
ஆங்கில மருத்துவத்தில் உடற்பரிசோதனை செய்வதை போல் சித்தாவிலும் முழுமையாக உடற்பரிசோதனை கணிக்கும் லேப் திறக்கவுள்ளோம். இதன் மூலம் பொதுமக்களுக்கு முன் கூட்டியே நோயை கணிக்க முடியும். தற்போது நாடி பார்ப்பவர்கள் குறைந்து வருகின்றனர். இதனால் இந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஏலகிரி மலையில் நாடி கணிக்கும் பயிற்சியை தேசிய சித்த மருத்துவ நிறுவனம் மற்றும் இம்காப்ஸ் ஆகியவைகள் இணைந்து அக்டோபர் 11 முதல் 20 வரையில் சித்த மருத்துவ மாணவர்களுக்கு நாடி கணிக்கும் பயிற்சியை அளிக்கவுள்ளோம். இது அவர்களின் திறனை மேம்படுத்தும்.
எங்களின் இலக்கு தமிழ்நாடு முழுவதும் நாடியை கணிக்கும் 300 வதியர்களை உருவாக்கும் நோக்கில் இயங்கி கொண்டிருக்கிறோம். திண்டுக்கல்லில் மலை பகுதியில் சித்த மருத்துவ முகாம் நடைபெற்றது. வேலூர் மாவட்டத்திலும் முகாமினை நடத்தி வருகிறோம். ஒவ்வொரு மாவட்டத்திலும் தனியார் மூலம் 50 படுக்கை வசதிகளுடன் சித்த மருத்துவமனை அமைக்க மத்திய அரசுக்கு விண்ணப்பித்தால் மாநில அரசு இடம் ஒதுக்கினால் மத்திய அரசு நிதியுதவியுடன் ஆரம்பிக்கலாம்.
வேலூர் மாவட்டத்திலும் 50 படுக்கைகளுடன் தனியார் மருத்துவமனை துவங்கவுள்ளோம். வரும் முன் காப்பது சித்த மருத்துவம் என்பதை மக்களுக்கு விழிப்புணர்வாக ஏற்படுத்த வேண்டும். டெங்கு காய்ச்சல் அதிகமாக பரவுவதால் சென்னையில் பூங்காக்களில் நிலவேம்பு குடிநீர் வழங்குகிறோம். மேலும் வீட்டிலும் நீங்கள் 3 முதல் ஐந்து நாட்கள் நிலவேம்பு குடிநீரை பருகினாலே டெங்கு காய்ச்சல் தடுக்கப்படும்.
மத்திய அரசின் ஆயுஷ் மிஷன் மூலம் ஒவ்வொரு இடங்களில் சித்த மருத்துவமனைகள் அதிகரிக்கவும் மக்களிடம் கொண்டு செல்லவும் திட்டங்கள் உள்ளது. சித்த மருத்துவ கல்லூரிகள் அரசு சார்ந்து உள்ளது. ஆனால் எங்களின் நோக்கம் மருத்துவ கல்லூரிகள் அதிகபடுத்தும் நோக்கம் கிடையாது. ஆனால் சித்த மருத்துவம் படித்த மாணவர்களின் வேலைவாய்ப்பை உருவாக்க வேண்டும். படித்து முடித்த சித்த மருத்துவ மாணவர்களுக்கு வேலை எய்ம்ஸ் போன்ற இடங்களிலும் சித்த மருத்துவர்கள் உள்ளனர். ஆராய்ச்சி நிறுவனமும் உள்ளது. பல இடங்களில் அதன் மூலம் வேலைவாய்ப்பை உருவாக்குவோம். மக்கள் சித்த மருத்துவத்தை நோக்கி வரவேண்டும். அந்த நிலையை ஏற்படுத்த வேண்டும். எய்ட்ஸ் நோய்க்கான மருந்து தட்டுபாடு கிடையாது என கூறினார்.

Comments
Post a Comment