• தமிழக விவசாயிகள் சங்க மாநில செயற்குழு.
· விவசாயிகளின் பயிர் கடனை முழுமையாக தள்ளுபடி செய்யவில்லை என்றால் பிப்ரவரி 6-ஆம் தேதி ஆயிரக்கணக்கான விவசாயிகளை ஒன்று திரட்டி திருவள்ளூரிலிருந்து சென்னை கோட்டையை நோக்கி நடைபயணம்
· தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநில செயற்குழு வேலூரில் தீர்மானம்.
· மாநில தலைவர் வேணுகோபால் பேட்டி
வேலூர் மாவட்டம், வேலூரில் தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் மாநில தலைவர் வேணுகோபால் தலைமையில் நடைபெற்றது. இதில் மாநில நிர்வாகிகள் சுபாஷ், ராமதாஸ், உதயகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் மாநிலம் முழுவதுமுள்ள வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவள்ளூர், காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, ஈரோடு ஆகிய மாவட்டங்களிலிருந்து நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்திற்கு பின்னர் மாநில தலைவர் வேணுகோபால் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
கடந்த 22-ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற விவசாயிகள் சங்க தலைவர்கள் அமைச்சர்கள் சந்திப்பு கூட்டத்தில் முழு பயிர் கடன் தள்ளுபடி அறிவிக்காததால் அவர்களுடைய முடிவை நாங்கள் ஏற்றுகொள்ளவில்லை. தமிழக அரசு முழு பயிர் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும். இதனை வலியுறுத்தி பிப்ரவரி 6-ஆம் தேதி திருவள்ளூரிலிருந்து - சென்னை கோட்டையை நோக்கி நடைபயண போராட்டத்தை நாங்கள் துவங்குகிறோம். இதில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் கலந்து கொள்வார்கள்.
மேலும் தமிழகத்தில் விவசாயிகளுக்கு வழங்கப்படும் இலவச மின்சாரம் தொடர வேண்டும். ஸ்மார்ட் மீட்டர் பொறுத்த கூடாது. அரசாங்கம் அதிக செலவு செய்கிறது. ஆனால் எங்களுடைய கடனை தள்ளுபடி செய்ய மறுக்கிறது. இதனை நீண்ட கால கடனாக கூட மாற்றி கொடுங்கள் என கூறினார்.

Comments
Post a Comment