• வேலூர் வீட்டு வசதி பிரிவிற்குட்பட்ட மனைகள் ஏலம்.
· வேலூர் வீட்டு வசதி பிரிவிற்குட்பட்ட மனைகள் ஏலம்.
வேலூர் வீட்டு வசதி பிரிவிற்குட்பட்ட வேலூர் புறநகர் திட்டம் பகுதி-IV, V, கழிஞ்சூர், தாராபடவேடு, சீக்கராஜபுரம், ஆற்காடு பகுதி-I, II, III, சோளிங்கர், திருவண்ணாமலை, செங்கம், காஞ்சிபுரம் பகுதி-II, திருப்பத்தூர் பகுதி-I ஆகிய திட்டங்களில் காலியாக உள்ள வணிக மனைகள் / கடை மனைகள் / பள்ளி மனைகள் / பொது உபயோக மனைகள் ஆகியவற்றை மின்னணு விலைப்புள்ளி மற்றும் ஏலம் மூலம் விற்பனை செய்ய 23.08.2026 அன்று தினசரி தமிழ் மற்றும் ஆங்கில செய்தி தாள்களில் (தினத்தந்தி (ம) தி இந்து) விளம்பரம் செய்து 24.08.2026 காலை 10.00 மணி முதல் 24.09.2026 காலை 11.00 மணி வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டது. பின்னர் நிர்வாக காரணங்களால் தினசரி தமிழ்நாளிதழில் (தினதந்தி) செய்தி வெளியிடப்பட்டு 15 நாட்கள் கூடுதல் கால அவகாசம் வழங்கப்பட்டது. அக்கால அவகாசம் வருகிற 08.10.2026 காலை 11.00 மணியுடன் நிறைவடைவதால் பொதுமக்கள் வாய்ப்பை பயன்படுத்தி https://tntenders.gov.in/nicgep/app மூலம் விண்ணப்பித்து பயன்பெறுமாறு வேலூர் மாவட்ட ஆட்சி தலைவர் பி.எஸ்.லீலா அலெக்ஸ், தெரிவித்துள்ளார்.
Comments
Post a Comment