• ஸ்ரீ ஜலகண்டீஸ்வரர் ஆலயத்தில் அன்னாபிஷேகம்.
· வேலூர் கோட்டை ஸ்ரீ ஜலகண்டீஸ்வரர் ஆலயத்தில் அரை டன் அரிசியை கொண்டு ஜலகண்டீஸ்வரருக்கு அன்னாபிஷேகம்.
· அகிலாண்டீஸ்வரி அம்மனுக்கு சுமார் 600 கிலோ காய்கறிகளை கொண்டு சாகம்பரி அலங்காரம் செய்து மகாதீபாராதனை.
· ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம்.
வேலூர் மாவட்டம், வேலூர் கோட்டையிலுள்ள ஸ்ரீ ஜலகண்டீஸ்வரர் ஆலயத்தில் ஐப்பசி மாதம் அன்னாபிஷேகத்தை முன்னிட்டு ஸ்ரீ ஜலகண்டீஸ்வரருக்கு சுமார் 500 கிலோ அரிசியை கொண்டு சாதம் சமைத்து அன்னத்தாலும், ஆப்பிள், சாத்துகொடி, வடை ஆகியவைகளால் மாலைகள் அணிவித்து சிறப்பு அலங்காரங்களை செய்து மந்திரங்கள் முழங்க மகாதீபாராதனை நடைபெற்றது.
இதே போன்று ஸ்ரீ அகிலாண்டீஸ்வரி அம்மனுக்கு கத்தரிக்காய், கேரட், வாழைக்காய், முள்ளங்கி, சுரக்காய், பூசணிக்காய் உள்ளிட்ட பல்வேறு காய்கறிகள் மற்றும் ஆப்பிள், திராட்சை உள்ளிட்டவைகள் 600 கிலோ எடையுள்ள காய்கறிகள், பழங்களால் சாகம்பரி அலங்காரம் செய்து மகாதீபாராதனைகள் நடைபெற்றது. இதில் கலவை சச்சிதானந்த சுவாமிகள், பாலமுருகனடிமை சுவாமிகள் மற்றும் திரளான பக்தர்கள் அரோகரா முழக்கத்துடன் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பிற்பகல் முதலே நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.


Comments
Post a Comment