• வேலூர் மாவட்டத்தில் பல்வேறு துறைகளின் நலத்திட்ட உதவிகள்.
- வேலூர் மாவட்டத்தில் பல்வேறு துறைகளின் சார்பில் 313 பயனாளிகளுக்கு
ரூ.4 கோடியே 77 இலட்சத்து 54 ஆயிரத்து 632 மதிப்பில் நலத்திட்ட உதவிகளை மாண்புமிகு கைத்தறி, துணிநூல் மற்றும் கதர்துறை அமைச்சர் வழங்கினார்.
வேலூர் மாவட்டத்தில் பல்வேறு துறைகளின் சார்பில் 313 பயனாளிகளுக்கு ரூ.4 கோடியே 77 இலட்சத்து 54 ஆயிரத்து 632 மதிப்பில் நலத்திட்ட உதவிகளை மாண்புமிகு கைத்தறி, துணிநூல் மற்றும் கதர்துறை அமைச்சர் ம.விஜய்பாலாஜி மாவட்ட ஆட்சியர் அலுவலக காயிதே மில்லத் கூட்டரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வழங்கி, சிறப்புரையாற்றினார்.
இந்நிகழ்ச்சியில் வேலூர் மாவட்டத்தில் அரசு மருத்துவமனைகளில் பணி ஓதுக்கீடு செய்யப்பட்ட 60 செவிலியர்களுக்கு பணி நியமன ஆணைகளும், தோட்டக்கலை துறையின் சார்பில் தேசிய தோட்டக்கலை இயக்கத்தின் சார்பில் 1 பயனாளிக்கு ரூ.90,000/- மதிப்பில் நலத்திட்ட உதவியும், தேசிய வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின்கீழ் 2 பயனாளிகளுக்கு ரூ.1,20,000/- மதிப்பில் நலத்திட்ட உதவியும், 2 பயனாளிகளுக்கு தலா ரூ.2,20,187 வீதம் ரூ.4,40,374/- மதிப்பில் சொட்டு நீர் பாசனத்திற்கான நலத்திட்ட உதவியும், தாட்கோ சார்பில் பிரதம மந்திரி அனுசூசித் யோஜனா (PM-AJAY) திட்டத்தின்கீழ் 64 பயனாளிகளுக்கு ரூ.32,00,000/-மதிப்பில் நலத்திட்ட உதவியும், உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் சார்பில் 76 பயனாளிகளுக்கு ரூ.10,08,672/-மதிப்பில் புதிய மின்னணு குடும்ப அட்டைகளும், வருவாய் துறையின் சார்பில் அணைக்கட்டு பகுதியை சார்ந்த 70 பயனாளிகளுக்கு ரூ.2,35,00,000/- மதிப்பில் இலவச வீட்டுமனை பட்டாக்களும், குடியாத்தம் பகுதியை சார்ந்த 23 பயனாளிகளுக்கு ரூ.57,50,000/- மதிப்பில் இலவச வீட்டுமனை பட்டாக்களும், வேளாண் பொறியியல் துறையின் சார்பில் வேளாண் இயந்திரமயமாக்கல் திட்டத்தின்கீழ் 11 பயனாளிகளுக்கு ரூ.16,01,968/- மதிப்பில் வேளாண் இயந்திரங்களும், சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில் 10 பயனாளிகளுக்கு ரூ.1,12,670/-மதிப்பில் நலத்திட்ட உதவிகளும், மகளிர் திட்டம் சார்பில் 10 மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ.1,05,00,000/- வங்கி கடனுதவிகளும், சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறையின் சார்பில் 10 பயனாளிகளுக்கு ரூ.20,000/- மதிப்பில் ஊட்டச்சத்து பெட்டகங்களும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 1 மாற்று திறனாளிக்கு ரூ.15,750/- மதிப்பில் சக்கர நாற்காலியும், மூளை முடக்குவாதத்தினால் பாதிக்கப்பட்ட 2 மாற்று திறனாளிகளுக்கு தலா ரூ.6,680/- வீதம் ரூ.13,360/- மதிப்பில் சிறப்பாக வடிவமைக்கப்பட்ட நாற்காலிகளும், 3 மாற்று திறனாளிகளுக்கு தலா ரூ.3,285/-வீதம் ரூ.9,855/-மதிப்பில் காதுக்கு பின்புறம் அணியும் நவீன காதொலி கருவிகளும், 2 மாற்று திறனாளிகளுக்கு தலா ரூ.52,350/- வீதம் ரூ.1,04,700/-மதிப்பில் மின்னணு பிரெய்லி வாசிப்பு கருவிகளும், மூளை முடக்குவாதத்தினால் பாதிக்கப்பட்ட 3 மாற்று திறனாளிகளுக்கு தலா ரூ.9,500/- வீதம் ரூ.28,500/- மதிப்பில் சிறப்பாக வடிவமைக்கப்பட்ட சக்கர நாற்காலிகளும், வேளாண்மை துறையின் சார்பில் 1 பயனாளிக்கு ரூ.1,38,783/- மதிப்பில் சொட்டு நீர் பாசனத்திற்கான நலத்திட்ட உதவியும், சமூக நல துறையின் சார்பில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின்கீழ் 22 பயனாளிகளுக்கு ரூ.11,00,000/- மதிப்பில் நலத்திட்ட உதவிகளும் என மொத்தம் 313 மாற்று திறனாளிகளுக்கு ரூ.4,77,54,632- மதிப்பில் நலத்திட்ட உதவிகளை கைத்தறி, துணிநூல் மற்றும் கதர் துறை அமைச்சர் ம.விஜய்பாலாஜி வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் மாண்புமிகு கைத்தறி, துணிநூல் மற்றும் கதர்த்துறை அமைச்சர் ம.விஜய்பாலாஜி தெரிவித்ததாவது.
இந்த நிகழ்ச்சியில் அரசு நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்குவதில் எனக்கு மிக மகிழ்ச்சி. நம்முடைய தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையிலான அரசைப் பொறுத்தவரை அரசின் திட்டங்கள் வெறும் அறிவிப்புகளாக மட்டும் இல்லாமல் அந்தத் திட்டங்களுடைய பயன்கள் உண்மையிலேயே மக்களுக்குச் சென்றடைய அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது.
ஒரு குடும்பத்திற்கு அரசு அறிவிக்கும் திட்டங்களின் பயன் கிடைக்கும்போது அந்தக் குடும்பத்தினுடைய சுமை குறைய வேண்டும். ஒரு மாணவருக்கு அரசின் உதவி கிடைக்கும்போது, அவருடைய எதிர்காலம் மேம்பட வேண்டும். ஒரு தொழிலாளிக்கு அரசின் உதவி கிடைக்கும்போது அவருடைய வாழ்வாதாரம் உயர வேண்டும். இதுதான் நம்முடைய அரசின் அடிப்படை நோக்கமாகும்.
மக்களுடைய தேவைகளை நேரடியாக கேட்டறிந்து, அவர்களுக்கு உரிய உதவிகளை சென்றடைய செய்வதிலும், அரசு நிர்வாகம் வெளிப்படையாகவும், பொறுப்புடனும் செயல்படுவதிலும் தமிழ்நாடு முதலமைச்சர்-ன் வழிகாட்டுதலின்படி தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறது. அதே நோக்கத்தோடுதான் அரசு அலுவலர்களும், மக்கள் பிரதிநிதிகளும் இணைந்து செயல்பட்டு அரசின் நலத்திட்டங்கள் அனைவருக்கும் சென்றடைய வேண்டும் என கைத்தறி, துணிநூல் மற்றும் கதர்துறை அமைச்சர் ம.விஜய்பாலாஜி தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் வேலூர் மாவட்ட ஆட்சி தலைவர் பி.எஸ்.லீலா அலெக்ஸ், சட்டமன்ற உறுப்பினர்கள் மு.ம.வினோத்கண்ணன் (வேலூர்), மரு.ம.சுதாகர் (காட்பாடி), த.வேலழகன் (அணைக்கட்டு), ஏ.தென்றல்குமார் (கீ.வ.குப்பம்), க.சிந்து (குடியாத்தம்), மாவட்ட வருவாய் அலுவலர் மரு.து.சுரேஷ், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மா.பிரியா, மகளிர் திட்ட இயக்குநர் ஜெயசுதா, மாவட்ட சுகாதார அலுவலர் மரு.விஜய் சந்திரன், மாற்று திறனாளிகள் நலத்துறை அலுவலர் பாபு, வேலூர் வருவாய் கோட்டாட்சியர் (பொ) ச.சரவணன், துறை சார்ந்த அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


Comments
Post a Comment