• கர்ப்பிணி தாய்மார்களுக்கு சமுதாய வளைகாப்பு.

  • வேலூர் மாவட்ட அளவிலான மாற்று திறனாளிகளுக்கான போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கம் வெற்றி சான்றிதழ்க ளை கைத்தறி, துணிநூல் மற்றும் கதர் துறை அமைச்சர் ம.விஜய் பாலாஜி வழங்கினார்.
  • கர்ப்பிணி தாய்மார்களுக்கு சமுதாய வளைகாப்பு.
  • வேலூர் மாவட்டத்தில்  ரூ.4.69 கோடி மதிப்பில் 11  முடிவுற்ற திட்ட பணிகளை மாண்புமிகு கைத்தறி, துணிநூல் மற்றும் கதர் துறை அமைச்சர் ம.விஜய் பாலாஜி திறந்து வைத்தார்.

            வேலூர் மாவட்டம், பேர்ணாம்பட்டு வட்டம், சாத்கார் கிராமத்தில் உள்ள ஸ்டார் கன்வென்சன் ஹாலில் பேர்ணாம்பட்டு வட்டாரத்திற்குட்பட்ட  கர்ப்பிணி தாய்மார்களுக்கான சமுதாய வளைகாப்பினை தொடங்கி வைத்து, கர்ப்பிணி தாய்மார்களுக்கு சீர்வரிசை பொருட்களை கைத்தறி, துணிநூல் மற்றும் கதர்துறை அமைச்சர் ம.விஜய்பாலாஜி வழங்கினார். இந்நிகழ்ச்சியில் 100-க்கும் மேற்பட்ட கர்ப்பிணி தாய்மார்களுக்கு சீர்வரிசை பொருட்களை வழங்கினார்.

வேலூர் மாவட்டம், அணைக்கட்டு ஊராட்சி ஒன்றியம், கந்தனேரி ஊராட்சி, கந்தனேரி கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் குழந்தை நேய பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின்கீழ் ரூ.69 இலட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள 3  வகுப்பறைகள் மற்றும் கணினி ஆய்வக கட்டிடத்தை கைத்தறி, துணிநூல் மற்றும் கதர்துறை அமைச்சர் திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் அணைக்கட்டு ஊராட்சி ஒன்றியத்தில்  ரூ.2.94 கோடி மதிப்பில் 7 முடிவுற்ற பணிகளுக்கான கல்வெட்டினை திறந்து வைத்தார்.

தொடர்ந்து, வேலூர் மாவட்டம், கீ.வ.குப்பம் ஊராட்சி ஒன்றியம், இலத்தேரி ஊராட்சி, இலத்தேரி கிராமத்தில் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் நபார்டு திட்டத்தின்கீழ் ரூ.74.22 இலட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள 3 கூடுதல் வகுப்பறைகள் கொண்ட கட்டிடத்தை திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் கீ.வ.குப்பம் ஊராட்சி ஒன்றியம், குடியாத்தம் ஊராட்சி ஒன்றியம், குடியாத்தம் மற்றும் பேர்ணாம்பட்டு நகராட்சிகளில் ரூ.1.75 கோடி மதிப்பில் 4 முடிவுற்ற பணிகளுக்கான கல்வெட்டினை திறந்து வைத்தார்.

அதனை தொடர்ந்து, மாண்புமிகு கைத்தறி, துணிநூல் மற்றும் கதர்த்துறை அமைச்சர்  வேலூர் மாவட்டத்தில் டிசம்பர் 3 உலக மாற்று திறனாளிகள் தினத்தை முன்னிட்டு, மாற்று திறனாளிகளுக்கு மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகளை காட்பாடியில் உள்ள மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் தொடங்கி வைத்து, வெற்றி பெற்றவர்களுக்கு  பதக்கங்கள்  மற்றும் வெற்றிச் சான்றிதழ்களை வழங்கினார்.

இப்போட்டியில் 250க்கும் மேற்பட்ட மாற்று திறனாளி மாணவ, மாணவியர்கள், மாற்று திறனாளி பணியாளர்கள் மற்றும் மாற்று திறனாளிகள் நல சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.  மாற்று திறனாளிகளின் மாற்றுத்திறன் தன்மை மற்றும் வயதிற்கேற்ப ஓட்டப்பந்தயம், நீளம் தாண்டுதல், குண்டு எறிதல், வட்டத் தட்டு எறிதல், காலிப்பர் மற்றும் கால்தாங்கி உதவியுடன் நடைப்போட்டி, மூன்று சக்கர வண்டியுடன் ஓட்டப்போட்டி, சக்கர நாற்காலியுடன் ஓட்டப்போட்டி, உருளைக்கிழங்கு சேகரித்தல், கிரிக்கெட் பந்து எறிதல் மற்றும் தடை தாண்டி ஓடுதல் ஆகிய விளையாட்டு போட்டிகளில் ஆண் மற்றும் பெண் இருபாலரும் கலந்து கொண்டனர். இப்போட்டியில் முதல் 3 இடம் பிடித்த மாற்று திறனாளிகளுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் பதக்கங்கள்  வழங்கப்பட்டது.

பின்னர், மாண்புமிகு கைத்தறி, துணிநூல் மற்றும் கதர் துறை அமைச்சர் பெண்ட்லேண்ட் அரசு வேலூர் பல்நோக்கு உயர்சிறப்பு மருத்துவமனையை பார்வையிட்டு ஆய்வு செய்து,   தமிழ்நாடு அரசு தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தின்கீழ் குழந்தைகளுக்கு  மோதிரங்களை அணிவித்து சிறப்பித்தார்.

மாண்புமிகு கைத்தறி, துணிநூல் மற்றும் கதர்துறை அமைச்சர் திறந்து வைத்த முடிவுற்ற திட்ட பணிகள் விவரம்.

  1. வேலூர் மாவட்டம், அணைக்கட்டு ஊராட்சி ஒன்றியம், ஒடுக்கத்தூர் ஊராட்சி, ஒடுகத்தூர் அரசு மகளிர் மேல்நிலை பள்ளியில் நபார்டு திட்டத்தின்கீழ் ரூ.74.78 இலட்சம் மதிப்பில்  அறிவியல் ஆய்வகம் மற்றும் கழிப்பறை கட்டடம் கட்டப்பட்டுள்ளது.
  2. வேலூர் மாவட்டம், அணைக்கட்டு ஊராட்சி ஒன்றியம், கந்தனேரி ஊராட்சி, கந்தனேரி  ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் குழந்தை நேய பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின்கீழ் ரூ.69 இலட்சம் மதிப்பில் 3 வகுப்பறைகள் கொண்ட கட்டிடம் மற்றும் கணினி அறை கட்டப்பட்டுள்ளது.
  3. வேலூர் மாவட்டம், அணைக்கட்டு ஊராட்சி ஒன்றியம், வசந்தநடை ஊராட்சி, வசந்தநடை ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் குழந்தை நேய பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின்கீழ் ரூ.35.80 இலட்சம் மதிப்பில் 2 வகுப்பறைகள் கொண்ட கட்டிடம் கட்டப்பட்டுள்ளது.
  4. வேலூர் மாவட்டம், அணைக்கட்டு ஊராட்சி ஒன்றியம், வரதலம்பட்டு ஊராட்சி, வரதலம்பட்டு  ஊராட்சி ஒன்றிய  நடுநிலைப்பள்ளியில் குழந்தை நேய பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின்கீழ் ரூ.35.80 இலட்சம் மதிப்பில் 2 வகுப்பறைகள் கொண்ட கட்டிடம் கட்டப்பட்டுள்ளது.
  5. வேலூர் மாவட்டம், அணைக்கட்டு ஊராட்சி ஒன்றியம், பாக்கம்பாளையம் ஊராட்சியில் 15-வது நிதிக்குழு மான்ய திட்டத்தில் ரூ.45 இலட்சம் மதிப்பில் புதிய துணை சுகாதார நிலையம் கட்டப்பட்டுள்ளது.
  6. வேலூர் மாவட்டம், அணைக்கட்டு ஊராட்சி ஒன்றியம், சேர்பாடி ஊராட்சி, ஏரியூர் கிராமத்தில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின்கீழ் ரூ.17.25 இலட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ளது.
  7. வேலூர் மாவட்டம், அணைக்கட்டு ஊராட்சி ஒன்றியம், ஊனை வாணியம்பாடி ஊராட்சி, நாராயணபுரத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம்-2025-26ன் கீழ் ரூ.16.45 இலட்சம் மதிப்பில் புதிய அங்கன்வாடிமையம் கட்டப்பட்டுள்ளது.
  8. வேலூர் மாவட்டம், கீ.வ.குப்பம் ஊராட்சி ஒன்றியம்,  இலத்தேரி ஊராட்சி, இலத்தேரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நபார்டு திட்டத்தின்கீழ் ரூ.74.22 இலட்சம் மதிப்பில் 3 கூடுதல் வகுப்பறைகள் கொண்ட கட்டிடம் கட்டப்பட்டுள்ளது.
  9. வேலூர் மாவட்டம், பேர்ணாம்பட்டு நகராட்சி, தரைக்காட்டில் SIG 2025-2026 திட்டத்தின்கீழ் ரூ.16.50 இலட்சம் மதிப்பில் அங்கன்வாடி மையம் கட்டப்பட்டுள்ளது.
  10. வேலூர் மாவட்டம், குடியாத்தம் நகராட்சி, அல்லியார் மதர்சைபுத் தெருவில் SIG 2025-2026 திட்டத்தின்கீழ் ரூ.16.50 இலட்சம் மதிப்பில் அங்கன்வாடி மையம் கட்டப்பட்டுள்ளது.
  11. வேலூர் மாவட்டம், குடியாத்தம் ஊராட்சி ஒன்றியம், மேல்ஆலத்தூர் ஊராட்சி, மேல் ஆலத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நபார்டு திட்டத்தின்கீழ் ரூ.67.90 இலட்சம் மதிப்பில் தரைத்தளம் மற்றும் முதல் தளத்துடன்கூடிய வகுப்பறைகள் (ஆய்வக அறையையும் உள்ளடக்கிய) கொண்ட கட்டடம் கட்டப்பட்டுள்ளது.

இந்நிகழ்வின்போது வேலூர் மாவட்ட ஆட்சி தலைவர் பி.எஸ்.லீலாஅலெக்ஸ், சட்டமன்ற உறுப்பினர்கள் மரு.ம.சுதாகர் (காட்பாடி), மு.ம.வினோத் கண்ணன் (வேலூர்), த.வேலழகன் (அணைக்கட்டு), ஏ.தென்றல்குமார் (கீ.வ.குப்பம்), க.சிந்து (குடியாத்தம்),  பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் இ.இமானுவேல் ஜெய்கர், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மா.பிரியா, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்  பிரேமலதா, மாவட்ட சுகாதார அலுவலர் மரு.விஜய் சந்திரன், மாவட்ட மாற்று திறனாளிகள் நலத்துறை அலுவலர் பாபு, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டப்பணி அலுவலர் சுமதி, வேலூர் வருவாய் கோட்டாட்சியர் (பொ) சரவணன், குடியாத்தம் வருவாய் கோட்டாட்சியர் க.செந்தில்குமார், அரசு வேலூர் மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனை முதல்வர் மரு.எஸ்.முத்துசித்ரா, பேர்ணாம்பட்டு நகராட்சி ஆணையர் (பொ) தனலட்சுமி, பேர்ணாம்பட்டு நகர்மன்ற தலைவர் பிரேமா வெற்றிவேல், பேர்ணாம்பட்டு நகர்மன்ற துணைதலைவர் ஆலியார் ஜுபேர் அஹ்மத், பேர்ணாம்பட்டு குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் மு.அ.ஷமீம்ரிஹானா உட்பட பலர் உடனிருந்தனர்.

 

Comments

Popular posts from this blog

• 25 ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்த பொறியியல் மாணவிகள்.

• கீரை திருவிழா - மக்கள் நல சந்தை.

• ஆக்சிலியம் கல்லூரி போருக்கு எதிரான அமைதி பேரணி.