• வேலூர் வைட்டமின் ஏ திரவம் அளிக்கும் பணி.


 ·         வேலூர் மாவட்டத்தில் வைட்டமின் ஏ உயிர் சத்து திரவம் அளிக்கும் பணி - மாவட்ட ஆட்சியர் துவங்கி வைத்தார்.

         வேலூர் மாவட்டம், வேலூர், சத்துவாச்சாரியில் உள்ள அங்கன்வாடி மையத்தில் வேலூர் மாவட்ட ஆட்சியர் லீலாஅலெக்ஸ் தலைமையில் குழந்தைகளுக்கு வைட்டமின் ஏ குறைபாடு தடுப்பு திட்ட முகாம் துவங்கப்பட்டது. இதனை மாவட்ட ஆட்சியர் துவங்கி வைத்தார்.

     வைட்டமின் ஏ திரவம் அளிக்கும் இம்முகாம் வரும் 31-ஆம் தேதி வரையில்  6 நாட்களுக்கு மாவட்டம் முழுவதும் நடக்கிறது. துணை சுகாதார நிலையங்கள் அங்கன்வாடி மையங்கள் மூலமாக சுமார் 1,244 பணியாளர்கள் சுமார் 91,791  குழந்தைகளுக்கு வைட்டமின் ஏ திரவம் வழங்கப்படவுள்ளது.

     இந்த வைட்டமின் குறைபாடுகளால் மாலைக்கண் பார்வை இழப்பு, வயிற்றுபோக்கு, நிமோனியா உள்ளிட்டவைகள் ஏற்படும். எனவே ஊட்டசத்து குறைபாடுகளிலிருந்து பாதுகாத்து கொள்ள திரவ சொட்டு மருந்தை அளிக்குமாறு ஆட்சியர் கேட்டு கொண்டார்.

    இந்த நிகழ்ச்சியில் வேலூர் சட்டமன்ற உறுப்பினர் வினோத்கண்ணா, மாநகர நல அலுவலர் பிரதாப்குமார், மாமன்ற உறுப்பினர் சுமதிமனோகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

 

 

Comments

Popular posts from this blog

• 25 ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்த பொறியியல் மாணவிகள்.

• கீரை திருவிழா - மக்கள் நல சந்தை.

• ஆக்சிலியம் கல்லூரி போருக்கு எதிரான அமைதி பேரணி.