• வேலூரில் வனத்துறை சார்பில் ஓவிய போட்டிகள்.
· வேலூரில் வனத்துறை சார்பில் ஓவிய போட்டிகள் - திரளான மாணவர்கள் பங்கேற்று ஓவியங்களை வரைந்தனர்.
· வன விலங்குகள் பகுதிகளை மக்கள் பாதுகாக்க வேண்டும். வன உயிரினங்களும் மனிதர்களும் இணைந்து வாழக்கூடிய சூழலை உருவாக்க வேண்டும் - மாவட்ட வன அலுவலர் அசோக்குமார் பேச்சு.
வேலூர் மாவட்டம், வேலூரில் உள்ள டான்பாஸ்கோ மேல்நிலை பள்ளியில் வனத்துறையின் சார்பில் வன உயிரின வார விழாவினை முன்னிட்டு பள்ளி கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான ஓவிய போட்டிகள் நடந்தது.
இதில் 500-க்கும் மேற்பட்ட பள்ளி கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்று ஆர்வமுடன் சுற்றுசூழல் பாதுகாப்பு மற்றும் புவி வெப்பமயமாதலை தடுத்தல் மற்றும் காடுகளை பாதுகாப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஓவியங்களை வரைந்தனர். இப்போட்டிகளை மாவட்ட வன அலுவலர் அசோக்குமார் துவங்கி வைத்தார். இதில் மண்டல வன பாதுகாவலர் மாரிமுத்து உள்ளிட்ட அதிகாரிகளும் ரமேஷ்குமார், யாசர் உள்ளிட்டோர் பங்கேற்றனர் மரக்கன்றுகளை நட்டனர்.
இவ்விழாவில் வேலூர் மாவட்ட வன அலுவலர் அசோக்குமார் பேசுகையில், மனிதர்களும் வன உயிரினங்களும் இணைந்து வாழக்கூடிய கொள்கைக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் வன விலங்குகளுக்கான பகுதிகளை மக்களின் ஒத்துழைப்புடன் பாதுகாக்க வேண்டுமென அதை வலியுறுத்தி ஓவிய போட்டிகள் நடைபெறுவதாக பேசினார்.

Comments
Post a Comment