• ஜெருசலேம் மானியம் பெற விண்ணப்பம்.

  • ஜெருசலேம் புனித பயணம் மேற்கொண்ட அனைத்து பிரிவினரையும் உள்ளடக்கிய கிறித்தவர்களுக்கு வழங்கப்படும் மானியம் பெற விண்ணப்பித்து பயனடைய வேலூர் மாவட்ட ஆட்சி தலைவர் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டை சேர்ந்த அனைத்து பிரிவினரையும் உள்ளடக்கிய 600 கிறித்தவர்கள் பயனடையும் வகையில் ஜெருசலேம் புனித பயணம் மேற்கொண்டு திரும்பிய 550 கிறித்தவர்களுக்கு நபர் ஒருவருக்கு ரூ.37,000/- வீதமும் 50 கன்னியஸ்திரிகள்/ அருட்சகோதரிகளுக்கு நபர் ஒருவருக்கு ரூ.60,000/- வீதமும் ECS முறையில் நேரடியாக மானியம் வழங்கும் திட்டத்தின் கீழ் நடப்பு ஆண்டில் ஜெருசலேம் புனித பயணம் மேற்கொண்டு திரும்பும் கிறித்தவ மத பயனாளிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

இதற்கான விண்ணப்பப் படிவத்தினை வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக முதல் தளத்தில் உள்ள மாவட்ட சிறுபான்மையினர் நல அலுவலகத்திலிருந்து கட்டணமின்றி பெறலாம். மேலும் www.bcmbcmw.tn.gov.in என்ற இணைய தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்த விண்ணப்பத்தினை 31.01.2027-க்குள் உரிய ஆவணங்களுடன் ஆணையர், சிறுபான்மையினர் நலத்துறை, கலசமஹால் பாரம்பரிய கட்டடம் முதல் தளம், சேப்பாக்கம், சென்னை-600005 என்ற முகவரிக்கு அனுப்பப்பட வேண்டும்.

எனவே, வேலூர் மாவட்டத்தில் வசிக்கும் அனைத்து பிரிவினரையும் உள்ளடக்கிய கிறித்தவ சமுதாய மக்கள் இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பித்து பயனடையுமாறு வேலூர் மாவட்ட ஆட்சி தலைவர் பி.எஸ்.லீலா அலெக்ஸ் தெரிவித்துள்ளார்.

 

Comments

Popular posts from this blog

• கீரை திருவிழா - மக்கள் நல சந்தை.

• 25 ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்த பொறியியல் மாணவிகள்.

• ஆக்சிலியம் கல்லூரி போருக்கு எதிரான அமைதி பேரணி.