• உள்ளாட்சிகள் தினத்தன்று கிராம சபை கூட்டம்.
· உள்ளாட்சிகள் தினத்தன்று அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக்கூட்டம்
அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடத்தப்பட வேண்டுமென தமிழக அரசு தெரிவித்துள்ளதை தொடர்ந்து, வேலுார் மாவட்டத்திலுள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் 01.11.2026 உள்ளாட்சிகள் தினத்தன்று காலை 11.00 மணியளவில் தவறாமல் கிராம சபை கூட்டம் கூட்டப்பட வேண்டுமென அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கும், மாவட்ட ஆட்சி தலைவர் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இக்கிராம சபை கூட்டத்தில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டிய பொருள்கள் விவரம்.
|
பொருள் 1 |
: |
கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் குறித்து விவாதித்தல். |
|
பொருள் 2 |
: |
கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை. |
|
பொருள் 3 |
: |
ஊரகப் பகுதிகளில் மழைநீர் சேகரிப்பு அமைப்புகள் ஏற்படுத்த எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விவாதித்தல். |
|
பொருள் 4 |
: |
கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விவாதித்தல். |
|
பொருள் 5 |
: |
வடகிழக்கு பருவழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விவாதித்தல். |
|
பொருள் 6 |
: |
தமிழ்நாடு கிராம மேம்பாடு மாற்றம் மற்றும் மறுமலர்ச்சி முன்னெடுப்பு (TN-VETRI). |
|
பொருள் 7 |
: |
குழந்தை மற்றும் வளரிளம் பருவ தொழிலாளர் முறையைத் தடுத்தல். |
|
பொருள் 8 |
: |
தமிழ்நாடு பல்லுயிர் வாரியம்-பல்லுயிர் மேலாண்மை குழு (BMCs) குறித்து விவாதித்தல். |
|
பொருள் 9 |
: |
இழிவு தரும் சாதி பெயர்களை மாற்றம் செய்தல். |
|
பொருள் 10 |
: |
வளர்ப்பு பிராணிகளுக்கு ரேபிஸ் தடுப்பூசி செலுத்துதல். |
|
பொருள் 11 |
: |
தெரு நாய்களுக்கு கருத்தடை மற்றும் ரேபிஸ் தடுப்பூசி செலுத்துதல். |
|
பொருள் 12 |
: |
சபாசார் வலைத்தளம் (SabhaSaar Portal) – உள்ளாட்சிகள் தின கிராம சபைக்கூட்டம் குறிப்பு (2026). |
|
பொருள் 13 |
: |
தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம்- கிராம செழுமை மீட்சித் திட்டம் (VPRP). |
|
பொருள் 14 |
: |
தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம்- கிராம செழுமை மீட்சித் திட்டத்தின் கீழ் பொது சொத்துக்கள், சேவைகள் மற்றும் வள மேம்பாட்டு திட்டம். |
|
பொருள் 15 |
: |
தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் – கிராம செழுமை மீட்சி திட்டத்தின் கீழ் சமூக மேம்பாடு திட்டம். |
|
பொருள் 16 |
: |
தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம்- பண்ணை மற்றும் பண்ணை சாரா செயல்பாடுகள். |
|
பொருள் 17 |
: |
வேளாண்மை – உழவர் நலத்துறை. |
|
பொருள் 18 |
: |
தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம்- ஊராட்சி அமைப்புகள் மற்றும் சமூக அடிப்படையிலான அமைப்புகளின் ஒருங்கிணைப்பு (PRI-CBO Convergence). |
|
பொருள் 19 |
: |
தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம்-தீன்தயாள் உபாத்யாய கிராமப்புற திறன் பயிற்சி திட்டம். |
|
பொருள் 20 |
: |
வளர்ச்சியடைந்த பாரதம் கிராம வேலை உறுதி மற்றும் வாழ்வாதாரத் திட்டம். |
|
பொருள் 21 |
: |
மழைநீர் சேகரிப்பு |
|
பொருள் 22 |
: |
தூய்மை பாரத இயக்ககம் (ஊரகம்) திட்டம் |
|
பொருள் 23 |
: |
இதர பொருட்கள் |
மேற்படி, கிராம சபை கூட்டங்களில் அனைத்து துறை உயர் அலுவலர்கள் பார்வையாளர்களாக கலந்து கொள்ள மாவட்ட ஆட்சி தலைவர் அவர்களால் உத்திரவிடப்பட்டுள்ளது. மேலும், கிராம சபை கூட்டம் நடைபெறுவதை கண்காணிக்க ஒன்றிய அளவில் மண்டல அலுவலர்கள் நியமனம் செய்தும், சிறப்பு மேற்பார்வையாளர்கள் நியமனம் செய்தும் மாவட்ட ஆட்சி தலைவர் ப்பி.எஸ்.லீலா அலெக்ஸ் உத்தரவிடப்பட்டுள்ளது.
Comments
Post a Comment