• பீஞ்சமந்தை ஊராட்சி வளர்ச்சி பணிகள் ஆட்சியர் ஆய்வு.
- அணைக்கட்டு ஊராட்சி ஒன்றியம், பீஞ்சமந்தை ஊராட்சியில் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து வேலூர் மாவட்ட ஆட்சி தலைவர் ஆய்வு.
வேலூர் மாவட்டம், அணைக்கட்டு ஊராட்சி ஒன்றியம், பீஞ்சமந்தை ஊராட்சியில் உள்ள நியாய விலை கடை, கிராம நிர்வாக அலுவலகம், தொடக்க பள்ளி, உயர்நிலை பள்ளி, அங்கன்வாடி மையம், ஆரம்ப சுகாதார நிலையம் ஆகிய இடங்களில் வேலூர் மாவட்ட ஆட்சி தலைவர் பி.எஸ்.லீலாஅலெக்ஸ் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
வேலூர் மாவட்ட ஆட்சி தலைவர் பீஞ்சமந்தை ஊராட்சியில் சாலையை அகலப்படுத்துவது தொடர்பாக பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தொடர்ந்து, அணைக்கட்டு ஊராட்சி ஒன்றியம், பீஞ்சமந்தை ஊராட்சியில் உள்ள நியாய விலை கடையை பார்வையிட்டு ஆய்வு செய்து, பொதுமக்களிடம் அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் முறையாக வழங்கப்படுகிறதா என கேட்டறிந்தார்.
அதனை தொடர்ந்து, பீஞ்சமந்தை ஊராட்சியில் உள்ள கிராம நிர்வாக அலுவலகத்தை பார்வையிட்டு, வருவாய் ஆவண பதிவேடுகளை ஆய்வு செய்தார்.
பின்னர், பீஞ்சமந்தை ஊராட்சியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியை பார்வையிட்டு ஆய்வு செய்து, மாணவ, மாணவிகளின் கற்றல் திறன்களை கேட்டறிந்தார். மேலும், பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்படும் உணவின் தரத்தை ஆய்வு செய்தார். சமையற்கூடத்தில் உள்ள அரிசி, பருப்பு உள்ளிட்ட பொருட்களின் இருப்பு மற்றும் தரத்தை ஆய்வு செய்தார்.
தொடர்ந்து, பீஞ்சமந்தை ஊராட்சியில் உள்ள சமூக நீதி பள்ளி மாணவர் விடுதியை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவு, விளையாட்டு உபகரணங்கள், செய்தி தாள், நூலகம் ஆகியவற்றை ஆய்வு செய்தார்.
அதனை தொடர்ந்து, பீஞ்சமந்தை ஊராட்சியில் உள்ள அரசு உயர்நிலை பள்ளியை பார்வையிட்டு ஆய்வு செய்து, மாணவ, மாணவிகளின் கற்றல் திறன்களை கேட்டறிந்தார். பள்ளியில் குடிநீர், கழிவறை போன்ற அடிப்படை வசதிகளை ஆய்வு செய்தார்.
பின்னர், சமூக நீதி பள்ளி மாணவியர் விடுதியை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது சமையற்கூடத்தில் உள்ள அரிசி, பருப்பு உள்ளிட்ட பொருட்களின் தரத்தை ஆய்வு செய்தார்.
தொடர்ந்து, அணைக்கட்டு ஊராட்சி ஒன்றியம், பீஞ்சமந்தை ஊராட்சியில் உள்ள அங்கன்வாடி மையத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது குழந்தைகளின் எண்ணிக்கை, வருகை, எடை, உயரம், ஊட்டச்சத்து நிலை குறித்து கேட்டறிந்தார்.
அதனை தொடர்ந்து, பீஞ்சமந்தை ஊராட்சியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை பார்வையிட்டு ஆய்வு செய்து, பொதுமக்களிடம் வழங்கப்படும் சிகிச்சை முறை மற்றும் அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்தார். மேலும், மருந்துகளின் இருப்பு குறித்து கேட்டறிந்தார்.
பின்னர், பீஞ்சமந்தை ஊராட்சி, சின்னஎட்டிபட்டு முதல் பீஞ்சமந்தை வரை VB-GRAM G திட்டத்தின்கீழ் ரூ.9.92 இலட்சம் மதிப்பில் நடைபெற்று வரும் மழைக்கால்வாய் அகலப்படுத்தும் பணியை பார்வையிட்டு ஆய்வு செய்து, பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தினார்.
தொடர்ந்து, அணைக்கட்டு ஊராட்சி ஒன்றியம், பீஞ்சமந்தை ஊராட்சி, தொங்குமலை கிராமத்தில் உள்ள சமூகநீதி உண்டு உறைவிட ஆரம்ப பள்ளியை பார்வையிட்டு ஆய்வு செய்து, மாணவ, மாணவிகளின் கற்றல் திறன்களை கேட்டறிந்தார். மேலும், மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்படும் உணவின் தரத்தை ஆய்வு செய்தார்.
அதனை தொடர்ந்து, தொங்குமலை கிராமத்தில் அரசு துணை சுகாதார நிலையத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது புறநோயாளிகள் வருகை பதிவேடு, மருந்துகளின் இருப்பு பதிவேடு, பணியாளர்களின் விவரம் குறித்து கேட்டறிந்தார்.
பின்னர், தொங்குமலை கிராமத்தில் உள்ள நியாய விலைக் கடையை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் இருப்பு மற்றும் தரத்தை ஆய்வு செய்தார். பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் விநியோகித்துள்ள விவரங்களை கேட்டறிந்தார்.
இந்த ஆய்வின்போது மாவட்ட ஊராட்சி குழு தலைவர் மு.பாபு, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் பிரியா, மாவட்ட சுகாதார அலுவலர் மரு.விஜய் சந்திரன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பிரேமலதா, மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர் ராஜராஜன், உதவி இயக்குநர் (பயிற்சி, ஊரக வளர்ச்சித்துறை) செல்வி மூ.காவ்யா, அணைக்கட்டு ஒன்றிய குழு தலைவர் பாஸ்கரன், வட்டாட்சியர் மகேஸ்வரி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வினோத்குமார், செல்வகுமார் உட்பட பலர் உடனிருந்தனர்.


Comments
Post a Comment