• “டாக்டர் அம்பேத்கர் விருது”

  • 2026-27ஆம் ஆண்டிற்கான “டாக்டர் அம்பேத்கர் விருது”   பெற  தகுதியுள்ள நபர்கள் உரிய ஆவணங்களுடன்  விண்ணப்பித்து பயன்பெறுமாறு  வேலூர் மாவட்ட ஆட்சி தலைவர் தெரிவித்துள்ளார். 

                தமிழ்நாட்டில் பட்டியல் இன மக்களின் வாழ்க்கை முன்னேற்றத்திற்காகவும், அவர்களின் சமூக, கல்வி, பொருளாதார மற்றும் ஒட்டுமொத்த முன்னேற்றத்திற்காகவும் பலர் அறிய தொண்டாற்றி வருகின்றனர்.

பட்டியல் இன மக்களின் முன்னேற்றத்திற்காக தங்களை முழுமையாக இணைத்து கொண்டு, சிறப்பான மற்றும் பாராட்டத்தக்க வகையில் ஆற்றிவரும் அறிய தொண்டினை கருத்தில் கொண்டு, தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவருக்கு ஆண்டுதோறும் திருவள்ளுவர் தினத்தன்று “டாக்டர் அம்பேத்கர் விருது" தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்டு சிறப்பிக்கப்படுகிறது.

அவ்வகையில், 2026-ஆம் ஆண்டிற்கான டாக்டர் அம்பேத்கர் விருது 2027 ஜனவரி மாதம் திருவள்ளுவர் தினத்தன்று வழங்கப்படவுள்ளது. இதற்கான விண்ணப்பப் படிவத்தை.

1.தமிழ்நாடு அரசின் www.tn.gov.in இணையதளத்தில் https://www.tn.gov.in/form_view.php?dep_id=MQ==  என்ற இணைப்பில் (Link) பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

2. ஆதிதிராவிடர் நல இயக்குநரக அலுவலகம், சேப்பாக்கம் சென்னை-600 005-ல் நேரில் பெற்றுக்கொள்ளலாம்.

3. வேலூர் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்திலும் விண்ணப்பப் படிவத்தைப் பெற்றுக்கொள்ளலாம்.

மேற்படி விருதினை பெற விரும்புவோர், தங்களைப் பற்றிய முழு விவரங்கள் மற்றும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இன மக்களின் முன்னேற்றத்திற்காக தாங்கள் ஆற்றியுள்ள அரிய தொண்டுகள், சாதனைகள் மற்றும் அதற்கான உரிய ஆவணங்கள் / சான்றுகள் ஆகியவற்றை இணைத்து பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவத்துடன், வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல  அலுவலகத்தில்  சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசிநாள். 10.11.2026

         மாவட்ட ஆட்சியரின் பரிந்துரை / ஒப்புதலுடன் பெறப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனைக்கு எடுத்து கொள்ளப்படும்.


Comments

Popular posts from this blog

• 25 ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்த பொறியியல் மாணவிகள்.

• கீரை திருவிழா - மக்கள் நல சந்தை.

• ஆக்சிலியம் கல்லூரி போருக்கு எதிரான அமைதி பேரணி.