• புதிய வாக்குசாவடிகள் அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம்.


 ·         புதிய வாக்குசாவடிகள் உருவாக்குவது குறித்து அனைத்து கட்சிகள் ஆலோசனை கூட்டம் - வேலூர் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது

           வேலூர் மாவட்டம், வேலூர், சத்துவாச்சாரியில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் லீலா அலெக்ஸ் தலைமையில்  புதிய வாக்குச்சாவடி உருவாக்குவதற்கான தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி அனைத்து கட்சிகளுடன் ஆலோசனை கூட்டமானது நடைபெற்றது.

     இதில் மாவட்ட வருவாய் அலுவலர் சுரேஷ், தேர்தல் வட்டாட்சியர் ரமேஷ் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.

         இதில் தவெக, திமுக, அதிமுக, காங்கிரஸ், பாஜக, தேமுதிக உள்ளிட்ட அரசியல் கட்சியினர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் பிரிக்கப்படும் வாக்குச்சாவடியின் வாக்காளர்கள் எண்ணிக்கை 1,200 வாக்களர்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும். வாக்காளர்களின் இருப்பிடத்திலிருந்து வாக்குச்சாவடி 2, கிலோ மீட்டருக்குள் இருக்க வேண்டும். இயற்கை தடைகளான ஆறு, மலை, குறுக்கீடுகள் இருப்பின் இவற்றைத் தவிர்த்திட புதிய வாக்குச்சாவடிகள் உருவாக்கலாம். வாக்குப்பதிவு அலுவலர்கள்  நாளை 22.10.2026 அன்று தங்களின் சட்டமன்ற அளவிலான அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் ஆலோசனை கூட்டம் நடத்தி வாக்குச்சாவடிகள் பிரிப்பது குறித்து முடிவு செய்ய இக்கூட்டமானது நடைபெற்றது.

                இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் லீலாஅலெக்ஸ் பேசுகையில்,

     இக்கூட்டமான கூடுதல் வாக்குசாவடிகள் உருவாக்கும் வகையில் எந்த வாக்குசாவடியிலாவது 1200-க்கும் மேல் வாக்காளர்கள் இருந்தால் பிரித்து புதிய வாக்குசாவடியை உருவாக்கவே இக்கூட்டமானது நடக்கிறது. இதனை தேர்தல் ஆணையத்திற்கு கருத்தாக 02-11-2026-க்குள் அனுப்ப வேண்டும். ஆகவே அரசியல் கட்சிகள் நீங்களும் உங்களின் கருத்துக்களை கூறுங்கள் என பேசினார்.

         இக்கூட்டத்தில் அரசியல் கட்சியினர் பேசுகையில், சில குளறுபடிகள் தேர்தல் ஆணையத்தால் நடந்தது. பேர்ணாம்பட்டு, குடியாத்தம் தொகுதியில் உள்ளதை அனைக்கட்டு தொகுதியில் சேர்த்துள்ளனர் எனவும், மேலும் தேர்தலின் போது சிலர் அயல் நாட்டு குடியுரிமை பெற்று அங்கேயும் வாக்கு செலுத்திவிட்டு இங்கேயும் நமது நாட்டில் வாக்கு செலுத்தினார்கள். இதுபோன்று தவறுகள் நடக்காமல் தடுக்க வேண்டுமென அரசியல் கட்சியினர் பேசினார்கள்.

 

Comments

Popular posts from this blog

• 25 ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்த பொறியியல் மாணவிகள்.

• கீரை திருவிழா - மக்கள் நல சந்தை.

• ஆக்சிலியம் கல்லூரி போருக்கு எதிரான அமைதி பேரணி.