• வேலூர் மாவட்டத்தில் பிரதம மந்திரி சூரிய சக்தி திட்டம்.
· வேலூர் மாவட்டத்தில் பிரதம மந்திரி சூரிய சக்தி திட்டம் குறித்து நடைபெற்ற விழிப்புணர்வு முகாம்.
வேலூர் மாவட்டத்தில்
பிரதம மந்திரி சூரிய சக்தி திட்டம் குறித்து சத்துவாச்சாரி ஜே.பி.எம்.மஹாலில்
நடைபெற்ற விழிப்புணர்வு முகாமில் மாவட்ட ஆட்சி தலைவர்
பி.எஸ்.லீலாஅலெக்ஸ் கலந்து
கொண்டு, சிறப்புரையாற்றினார்.
இம்முகாமில் மாவட்ட ஆட்சி தலைவர் தெரிவித்ததாவது.
சூரிய சக்தி மின்சாரம் மேற்கூரை வேலூர் மாவட்டத்தில் பல வீடுகளில் அமைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் இத்திட்டத்தை கொண்டு சேர்க்கும் வகையில் அனைத்து வீடுகளிலும் சூரிய சக்தி சோலார் பேனல்களை அமைக்க வேண்டும். இதற்காக மத்திய மாநில அரசுகள் மானியம் வழங்குகிறது. இதனால் மின் தேவையும் குறையும். வேலூர் மாவட்டத்தில் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக உள்ளதால் பெரும்பாலான வீடுகளில் சூரிய சக்தி சோலார் பேனல்களை அமைக்க வேண்டும். நாளுக்கு நாள் தொழில்நுட்பங்கள் வளர்ந்து வருகிறது. அதற்கு ஏற்றார் போல நாமும் மாற வேண்டும். அனைவரும் சோலார் பேனல்களை வீடுகளில் அமைக்க வேண்டும். எனவே பொதுமக்கள் இந்த விழிப்புணர்வு முகாமை பயன்படுத்தி கொள்ளுமாறு மாவட்ட ஆட்சி தலைவர் பி.எஸ்.லீலாஅலெக்ஸ் தெரிவித்தார்.
சூரிய சக்தியை பயன்படுத்தி வீடுகளுக்கு மின்சாரம் வழங்கும் திட்டமான "பிரதம மந்திரியின் சூரிய வீடு இலவச மின்சார திட்டம்", மாண்புமிகு இந்திய பிரதமர் அவர்களால் 29.02.2024 அன்று தொடங்கி வைக்கப்பட்டது. மத்திய அரசின் நிதி உதவியுடன் இத்திட்டத்தின் மூலம் நாடு முழுவதும் 1 கோடி வீடுகளுக்கு சூரிய தகடுகள் பொருத்தி இலவச மின்சாரம் உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. வேலூர் மாவட்டத்தில் நாளது வரை 1384 வீட்டு மின் நுகர்வோர் பயனடைந்துள்ளனர்.
பிரதம மந்திரியின் சூரிய வீடு இலவச மின்சார திட்டத்தின் சிறப்பு அம்சங்கள்:
அனைத்து வீட்டு மின் இணைப்பு உரிமையாளர்களும் இத்திட்டத்தில் விண்ணப்பிக்கலாம். இத்திட்டத்திற்கு வங்கிகள் மூலம் உடனடியாக கடன் பெறலாம். இத்திட்டத்தின் செயல்பாடு காலம் 31.03.2027 வரை இத்திட்டத்திற்கு மத்திய அரசால் மானியம் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் தற்போது 05.08.2026 முதல் பதிவு செய்யப்பட்ட விண்ணப்பங்களுக்கு மாநில அரசு மானியம் வழங்கப்பட உள்ளது.
மானியம்
|
வ.எண். |
சூரிய மின்திறன் |
மத்திய அரசு மானியம் |
மாநில அரசு மானியம் |
மொத்த மானியம் |
|
1 |
1 கிலோவாட் |
ரூ.30,000/- |
ரூ.5,000/- |
ரூ.35,000/- |
|
2 |
2 கிலோவாட் |
ரூ.60,000/- |
ரூ.10,000/- |
ரூ.70,000/- |
|
3 |
3 கிலோவாட் அதற்கு மேல் 10 கிலோவாட் வரை |
ரூ.78,000/- |
ரூ.22,000/- |
ரூ.1,00,000/- |
இத்திட்டத்தில் மேற்கூறப்பட்ட மானியம் நுகர்வோரின் வங்கிக் கணக்கில் நேரடியாக சூரிய திட்ட பணிகள் முடிவுற்ற 7 நாட்களில் இருந்து 30 நாட்களுக்குள் செலுத்தப்படும்.
1 கிலோவாட் சூரிய தகடு ஒரு நாளில் 4 முதல் 5 யூனிட்கள் வரை உற்பத்தி செய்யும். நுகர்வோர் செய்யும் முதலீடு குறுகியகாலத்தில் திரும்ப பெறலாம். இத்திட்டத்தில் விண்ணப்பிக்க www.pmsuryaghar.gov.in என்ற இணையதளம் மூலமாக பதிவு செய்யலாம்.
எனவே பொதுமக்கள், இத்திட்டத்தை பயன்படுத்தி தங்களது இல்லத்தில் சூரிய தகடுகள் பொருத்திகொள்ளலாம். மேலும் சூரிய ஒளி மூலம் மின் உற்பத்தியை பெருக்கி, "பசுமையான, ஒளிமையமான" எதிர்காலத்தை உருவாக்குவோம்.
இம்முகாமில் மின்வாரிய தலைமை பொறியாளர் ஜெயினுல்லாபுதின், மேற்பார்வை பொறியாளர் மயில்வாகணன், செயற்பொறியாளர் ஆராக்கிய அற்புதராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Comments
Post a Comment