• “போஷன் மா” ஊட்டச்சத்து விழிப்புணர்வு நிகழ்வுகள்.
- வேலூர் மாவட்டத்தில் ஊட்டச்சத்து விழிப்புணர்வு மாதம் – “போஷன் மா” முன்னிட்டு ஊட்டச்சத்து குறித்து பல்வேறு விழிப்புணர்வு நிகழ்வுகள்.
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் (TNSRLM), வேலூர் மாவட்டம் சார்பில் ஊட்டச்சத்து விழிப்புணர்வு மாதம் "போஷன் மா" நிகழ்வுகள் மாவட்ட ஆட்சி தலைவர் பி.எஸ்.லீலாஅலெக்ஸ் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. ஊட்டச்சத்து குறித்த விழிப்புணர்வை பொதுமக்களிடையே ஏற்படுத்தும் வகையில் பேரணி, கருத்தரங்கம், போட்டிகள், கோலம் வரைதல், உணவு கண்காட்சி ஆகிய நிகழ்வுகள் நடைபெற்றது.
மாவட்ட ஆட்சி தலைவர் ஆரோக்கியமான உணவை வலியுறுத்தும் வகையில் ஊட்டச்சத்து விழிப்புணர்வு பேரணியை தொடங்கி வைத்தார். மேலும், ஆட்சியர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டிருந்த பாரம்பரிய உணவுகள் மற்றும் ஆரோக்கியமான சிற்றுண்டிகளின் உணவு கண்காட்சியினை பார்வையிட்டார். பின்னர், ஊட்டச்சத்து குறித்து வரையப்பட்ட வண்ண கோலங்களை பார்வையிட்டார்.
ஆரேக்கியமான உணவை வலியுறுத்தும் வகையில் விழிப்புணர்வு பேரணி, ஊட்டச்சத்து தொடர்பான கருத்தரங்கம், ஆரோக்கியமான பழக்கவழக்கங்கள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பேச்சுப் போட்டி, கட்டுரை போட்டி, ஓவியப் போட்டி, ஊட்டச்சத்து முக்கியத்துவம் குறித்து கோலங்கள் வரைதல், ஊட்டச்சத்து உணவு கண்காட்சி பாரம்பரிய உணவுகள் மற்றும் ஆரோக்கியமான உணவுகளின் சிறுதானிய கண்காட்சி சிறப்பாக நடத்தப்பட்டது.
இந்நிகழ்வின்போது மகளிர் திட்ட இயக்குநர் ஜெயசுதா, மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் சுமதி உட்பட பலர் உடனிருந்தனர்.

Comments
Post a Comment