• வாக்காளர்களின் பெயர்களை பதிவு செய்ய சிறப்பு முகாம்.

·        இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்ட மற்றும் தகுதி வாய்ந்த இளைஞர்கள் / முதல் முறை வாக்காளர்களின் பெயர்களை பதிவு செய்வதற்கு சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் - வேலுார் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சி தலைவர். 

இந்திய தேர்தல் ஆணையம், தனது 29.09.2026-ம் தேதியிட்ட கடிதத்தின் வாயிலாக, “சிறப்புத் தீவிரத் திருத்தப் பணி” (SIR) ஏற்கனவே நிறைவடைந்த மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் பின்வரும் நடவடிக்கைகளை மேற்கொள்ளமாறு அறிவுறுத்தியுள்ளது.

          தொடர் திருத்த நடைமுறையின் கீழ், விடுபட்ட வாக்காளர்கள் மற்றும் இளம் / முதல் முறையாக தகுதி பெறும் வாக்காளர்களை பதிவு செய்வதற்கான சிறப்பு முகாமினை வாக்காளர் பதிவு அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டும். தேர்தல் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் ”படிவம் 6-உடன் இணைக்கப்பட்டுள்ள ”உறுதிமொழிப் படிவம்” (Declaration From), சிறப்பத் தீவிரத் திருத்தக் (SIR) காலகட்டத்தில் மட்டுமே பயன்படுத்தப்படும். சிறப்புத் தீவிரத் திருத்தம் அல்லாத காலக்கட்டங்களில்,”வாக்காளர் பதிவு விதிகள் 1960“-ன்படி பொருந்தக்கூடிய படிவங்கள் பயன்படுத்தப்படும்.

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்ட மற்றும் தகுதி வாய்ந்த இளைஞர்கள் / முதல் முறை வாக்காளர்களின் பெயர்களை பதிவு செய்வதற்கு சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் என வேலுார் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சி தலைவர் பி.எஸ்.லீலா அலெக்ஸ் தெரிவித்துள்ளார்.

 

Comments

Popular posts from this blog

• கீரை திருவிழா - மக்கள் நல சந்தை.

• 25 ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்த பொறியியல் மாணவிகள்.

• ஆக்சிலியம் கல்லூரி போருக்கு எதிரான அமைதி பேரணி.