• “நமது பி.எஸ்.என்.எல்.” விழிப்புணர்வு பேரணி.
· “நமது பி.எஸ்.என்.எல்.” விழிப்புணர்வு பேரணி.
வேலூர் மாவட்டம், வேலூரில் உள்ள பிஎஸ்என்எல் பொதுமேலாளர் அலுவலகத்திலிருந்து வேலூர் வணிகப்பிரிவு, ”ஹமாரா பி.எஸ்.என்.எல்” பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக "ஆரோக்கியமே செல்வம்" என்ற கருப்பொருளுடன் ஒரு விழிப்புணர்வு பேரணியை வேலூர் கோட்ட பொதுமேலாளர் ராஜு துவங்கி வைத்தார். இதில் துணை பொதுமேலாளர் அசோக்நாயக் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.
இதில் வேலூர் பி.எஸ்.என்.எல். பொதுமேலாளர் அலுவலகத்திலிருந்து விழிப்புணர்வு பேரணி தொடங்கியது. இதில் பி.எஸ்.என்.எல் அதிகாரிகள், ஊழியர்கள், உரிமம் பெற்ற விற்பனை முகவர்கள் (Franchisees), விற்பனை கூட்டாளர்கள் ஓய்வூதியதாரர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் பங்கேற்க உள்ளனர்.
டிஜிட்டல் உள்ளடக்கம் குறித்த செய்தியை இப்பேரணி எடுத்துரைப்பதோடு பி.எஸ்.என்.எல்–இன் நவீன தொலைதொடர்பு மற்றும் பிராட்பேண்ட் சேவைகளை பயன்படுத்த பொதுமக்களை ஊக்குவிக்கும்.
நகரின் முக்கிய வீதிகளின் வழியாக சென்ற இப்பேரணி மீண்டும் பொதுமேலாளர் அலுவலகத்தில் நிறைவடைந்தது.

Comments
Post a Comment