• வேலூர் சுகாதார ஆய்வாளர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்.


 ·         வேலூர் சுகாதார ஆய்வாளர்கள் கவன ஈர்ப்பு பெருந்திரள் முறையீடு ஆர்ப்பாட்டம்.

        வேலூர் மாவட்டம், வேலூர், சத்துவாச்சாரியில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட சுகாதார அலுவலகம் முன்பாக தமிழ்நாடு சுகாதார ஆய்வாளர்கள் சங்கம் சார்பில் மாவட்ட தலைவர் சரவணன் தலைமையில் ஆர்பாட்டம் நடைபெற்றது. இதனை மாநில செயற்குழு உறுப்பினர் சந்திரன் துவங்கி வைத்தார்.

இதில் சுகாதார ஆய்வாளர்களின் பதவி உயர்வு பணியிடங்களான தொழில்நுட்ப நேர்முக உதவியாளர், மாவட்ட நலகல்வியாளர், மருத்துவமல்லா மேற்பார்வையாளர் மற்றும் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ஆகியவற்றை நிரப்புவதில் நிலவும் அலட்சியப்போக்கை கைவிட்டு உடனடியாக இப்பணியிடங்களை நிரப்பிடுக.

காய்ச்சல் / டெங்கு தடுப்பு நேரடி களப்பணி இடங்களான சுகாதார ஆய்வாளர் நிலை-2 பணியிடங்கள் பெருமளவு காலியாக இருப்பதை உடனடியாக நிரப்பிட நடவடிக்கை எடுத்திடு. டெங்கு / காய்ச்சல் கட்டுப்பாட்டு பணிகளில் குளோரினேசன், தீவிர திடக்கழிவு தூய்மைப் பணி, புகை மருந்து அடித்தல் உள்ளிட்ட சுகாதார ஆய்வாளர்கள் நேரடி பணி வரம்பிற்குள் வராத பிற துறை சார்ந்த பணிகளை மேற்கொள்ள எவ்வித நடவடிக்கையும் இல்லாது, சுகாதார ஆய்வாளர்களை மட்டுமே பொறுப்பாக்கி மிரட்டும் போக்கை கைவிடுக..!

          தற்போது தீவிர காய்ச்சல் / டெங்கு தடுப்பு பணிச்சுமையில் இருக்கும் சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் வட்டார சுகாதார மேற்பார்வையாளர்களுக்கு காலி பணியிடங்களின் கூடுதல் பொறுப்பு வழங்கி  எல்.சி.டிசி முகாம் பணிகளை செய்ய நிர்ப்பந்திப்பதை கைவிட வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி திரளான சுகாதார ஆய்வாளர்கள் கலந்து கொண்டு  கோஷங்களை எழுப்பினர்.

 

Comments

Popular posts from this blog

• 25 ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்த பொறியியல் மாணவிகள்.

• கீரை திருவிழா - மக்கள் நல சந்தை.

• ஆக்சிலியம் கல்லூரி போருக்கு எதிரான அமைதி பேரணி.