• வேலூர் வைட்டமின் “A” குறைபாடு தடுப்பு திட்ட முகாம்.

·        வேலூர் மாவட்டத்தில் 26.10.2026 முதல் 31.10.2026 வரை வைட்டமின் “A” குறைபாடு தடுப்பு திட்ட முகாம் நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சி தலைவர் தெரிவித்துள்ளார்.

வேலூர் மாவட்டத்தில் 26.10.2026 முதல் 31.10.2026 வரை வைட்டமின் “A” குறைபாடு தடுப்பு திட்ட முகாம் நடைபெறவுள்ளது. 6 மாதம் முதல் 60 மாதம் வரை உள்ள குழந்தைகளுக்கு 6 மாதத்திற்கு ஒருமுறை VITAMIN-A உயிர்சத்து திரவம் அளிக்கப்படுகிறது.

                வைட்டமின் “A” குறைபாடு தடுப்பு திட்ட முகாமானது துணை சுகாதார நிலையங்கள் மற்றும் அங்கன்வாடி மையங்கள் மூலமாக அட்டவணைப்படி அனைத்து பகுதிகளிலும் புதன்கிழமை தவிர VITAMIN-A திரவம் இலவசமாக வழங்கப்படும்.

             நமது மாவட்டத்தில் இந்த முகாமின் மூலமாக சுமார் 91,897 குழந்தைகள் பயன் பெறுவார்கள். இந்த பணியில் கிராம சுகாதார செவிலியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், ஆஷா பணியாளர்கள் மற்றும் மேற்பார்வையாளர்கள் உள்பட 1524 பேர்  ஈடுபட உள்ளனர்.

                பெற்றோர்கள் தங்கள் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு இந்த முகாம் மூலமாக VITAMIN-A உயிர்சத்து திரவம் பெற்று VITAMIN-A குறைபாடு நோய்களான மாலைக்கண் நோய், பார்வை இழப்பு மற்றும் வயிற்றுப்போக்கு, நிமோனியா, தீவிர ஊட்டச்சத்து குறைபாடு போன்ற நோய்களிலிருந்து பாதுகாத்து கொள்ளுமாறு வேலூர் மாவட்ட ஆட்சி தலைவர் பி.எஸ்.லீலாஅலெக்ஸ் தெரிவித்துள்ளார்.  

Comments

Popular posts from this blog

• 25 ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்த பொறியியல் மாணவிகள்.

• கீரை திருவிழா - மக்கள் நல சந்தை.

• ஆக்சிலியம் கல்லூரி போருக்கு எதிரான அமைதி பேரணி.