• வேலூர் மாநகராட்சி பகுதியில் ஆட்சியர் ஆய்வு.
· வேலூர் மாநகராட்சி பகுதியில் ஆட்சியர் ஆய்வு.
வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வேலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் வேலூர் மாவட்ட ஆட்சி தலைவர் பி.எஸ்.லீலாஅலெக்ஸ் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மாநகராட்சிக்கு உட்பட்ட நிக்கல்சன் கால்வாய் தூர் வாரும் பணியினை ஆய்வு செய்தார்.
சேண்பாக்கம் திடீர் நகர் பகுதியில் பொதுமக்களிடம் குடிநீர், தெரு விளக்கு மற்றும் அடிப்படை வசதிகள் முறையாக கிடைக்கின்றதா என கேட்டறிந்தார். தொடர்ந்து திடீர் நகர் பகுதி ஏரி கால்வாய் தூர் வாரும் பணியினை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மேல்மொணவூர் பகுதியில் அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் மாணவர் விடுதியை பார்வையிட்டு ஆய்வு செய்து, மாணவர்களிடம் கற்றல் திறன் மற்றும் அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்தார்.
இந்த ஆய்வின்போது மாநகராட்சி கண்காணிப்பு பொறியாளர் கண்ணன், மாநகர நல அலுவலர் மரு. பிரதாப்குமார், வேலூர் வட்டாட்சியர் உதயகுமார் உட்பட பலர் உடன் இருந்தனர்.


Comments
Post a Comment