• தேசிய நல குழும தற்காலிக செவிலியர்.

  • தேசிய நல  குழும தற்காலிக செவிலியர் விண்ணப்பம்.

                தேசிய நல குழுமத்தின் கீழ், வேலூர் மாவட்டத்திற்குட்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள ஒப்பந்த / தற்காலிக செவிலியர் (Contractual / Temporary Staff Nurse) காலி பணியிடங்கள் முற்றிலும் தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் வேலூர் மாவட்ட நலச்சங்கம் வாயிலாக நிரப்பப்படவுள்ளது. 13.09.2026 அன்று வேலூர் மாவட்ட ஆட்சி தலைவர் / தலைவர், மாவட்ட சுகாதார நல சங்கம், வேலூர் வாயிலாக பத்திரிக்கை செய்தி வெளியிடப்பட்டு, 26.09.2026 அன்று மாலை 5.00 மணி வரை 1708 விண்ணப்பங்கள் பெறப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக, பெறப்பட்ட விண்ணப்பங்களை  பரிசீலினை செய்ததில் சுமார் 693 விண்ணப்பங்களுக்கு மேலாக தகுதிக்கான மதிப்பெண் வழங்கும் பொருட்டு, 10-வது / 12-வது வகுப்பு, DGNM மற்றும் B.Sc., பட்டப்படிப்பு ஆண்டு வாரியாக மதிப்பெண் பட்டியல்கள் மற்றும் சாதிச்சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ் (ம) TN Nursing Counselling-ல் பதிவு செய்து இதுநாள் வரை புதுப்பித்தமைக்கான சான்று (Renewal Upto Valid) முதலான விண்ணப்பத்துடன் இணைக்கப்படாமல் இருப்பது கண்டறியப்பட்டது.

விண்ணப்பதாரர்களின் விடுபட்ட சான்றிதழ்கள் விவரம் vellore.nic.in இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. அவ்வாறாக விடுபட்ட சான்றிதழ்களின் நகல்களை எதிர்வரும் 03.10.2026 அன்று மாலை 5.00 மணிக்குள் வேலூர் மாவட்ட சுகாதார அலுவலகத்தில் நேரிலோ அல்லது dhsvlr2026@gmail.com  என்ற மின்னஞ்சல் வாயிலாக ஒப்படைக்குமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள். சான்றிதழ்களின் நகல்களை சமர்ப்பிக்க தவறும்பட்சத்தில் தகுதியின் விண்ணப்பம் நிராகரிக்கப்படும் என வேலூர் மாவட்ட ஆட்சி தலைவர் பி.எஸ்.லீலா அலெக்ஸ் தெரிவித்துள்ளார்.

அலுவலக முகவரி:-
மாவட்ட சுகாதார அலுவலர் / நிர்வாக செயலாளர்,
வேலூர்  மாவட்ட நலச்சங்கம்,

வேலூர்  – 632 009.

Comments

Popular posts from this blog

• கீரை திருவிழா - மக்கள் நல சந்தை.

• 25 ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்த பொறியியல் மாணவிகள்.

• ஆக்சிலியம் கல்லூரி போருக்கு எதிரான அமைதி பேரணி.