• உலகின் விஞ்ஞானிகள் பட்டியலில் 2% விஐடி பேராசிரியர்கள்.


 ·         உலகின் 2 சதவீத விஞ்ஞானிகள் பட்டியலில் விஐடி பல்கலை. பேராசிரியர்கள் 99 பேர் இடம் பிடித்து சிறப்பிடம்.

·         முதல் முறை ரூ.1.45 கோடி ஊதியத்துக்கு வேலைவாய்ப்பு பெற்ற மாணவர்கள்.

           வேலூர், உலகின் தலைசிறந்த 2 சதவீத விஞ்ஞானிகளின் பட்டியலில் விஐடி பல்கலைகழகத்தை சேர்ந்த 99 பேராசிரியர்கள் இடம் பிடித்து சிறப்பு சேர்த்துள்ளனர்.

      நடப்பாண்டில் முதல் முறையாக அதிகபட்சமாக ரூ.1.45 கோடி ஊதியத்துக்கு விஐடி மாணவர்கள் வேலைவாய்ப்பு பெற்று சிறப்பு சேர்த்துள்ளனர்.

    இதுகுறித்து, விஐடி பல்கலைகழக வேந்தர் முனைவர் கல்விக்கோ கோ.விசுவநாதன் கூறியிருப்பதாவது:

     வேலூர் பொறியியல் கல்லூரியாக (Vellore Engineering College) கடந்த 1984-ல் 184 மாணவர்களுடன் தொடங்கப்பட்ட இக்கல்வி நிறுவனம், விஐடி (Vellore Institute of Technology) பல்கலைகழகமாக அங்கீகாரம் பெற்று கடந்த 41 ஆண்டுகளில் உலக அரங்கில் பொறியியல் கல்வியில் சிறந்த பல்கலைகழகமாக பரிமளித்து வருகிறது. விஐடி பல்கலைக்கழகத்தின் 4 வளாகங்களில் 1 லட்சம் மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.

உலகின் தலைசிறந்த 2 சதவீத விஞ்ஞானிகள் பட்டியலில் மகுடம்:

           2026-ம் ஆண்டுக்கான ஸ்டான்போர்ட் –எல்சேவியர் உலகின் தலைசிறந்த 2 சதவீத விஞ்ஞானிகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது.

   உலகின் தலைசிறந்த 2 சதவீத விஞ்ஞானிகள் பட்டியலில் விஐடி பல்கலைக்கழகம் கடந்த 2022-ல் 48-ம், 2023-ல் 58, 2024-ல் 76, 2025-ல் 90  என பேராசிரியர்கள் இடம் பெற்றிருந்தனர்.

     இந்நிலையில், 2026-ம் ஆண்டுக்கான பட்டியலில் 99 பேராசிரியர்கள் இடம் பெற்று, இந்திய அளவில் சிறப்பு பெற்றுள்ளனர்.

     முதல் முறை ரூ.1.45 கோடி ஊதியத்துக்கு மாணவர்கள் தேர்வு:

    விஐடி பல்கலைகழக மாணவர்கள் உலகில் உள்ள பெரு நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெற்று வருகின்றனர். நடப்பாண்டில் விஐடி பல்கலைக்கழக வரலாற்றில் முதல் முறையாக அதிகபட்சமாக 1.45 கோடி ஊதியத்துக்கு மாணவர்கள் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். 4 வளாகங்களிலும் மொத்தம் 12,329 பேருக்கு வேலைவாய்ப்பு ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன.

QS உலக பல்கலைக்கழக தரவரிசை மற்றும் தேசிய கல்வி நிறுவன தரவரிசை (NIRF) பட்டியலில் சிறப்பிடம்:

* QS உலக பல்கலைகழக தரவரிசையில் 2026-ம் ஆண்டில், உலகளவில் 597-ம் இடம் பிடித்து சிறப்பு சேர்த்துள்ளது.

* QS உலக பல்கலைகழக தரவரிசையில் 2025-ம் ஆண்டில், நிலைத்தன்மை பிரிவில் உலகளவில் 352-ம் இடம் பிடித்து சிறப்பு சேர்த்துள்ளது. இந்திய அளவில் 7-ம் இடம் பிடித்து மகுடம் சூடியுள்ளது.

* QS உலக பல்கலைகழக தரவரிசை - பாட வாரியாக 2025 பொறியியல் மற்றும் தொழில்நுட்பத்தில் உலகில் 119-வது இடத்திலும், இந்தியாவில் 6-வது இடம் பிடித்து சிறப்பு சேர்த்துள்ளது.

* ஷாங்காய் ARWU தரவரிசை பட்டியலில் இந்தியாவில் முதல் 3 இடங்களிலும், உலகில் முதல் 600 இடங்களுக்குள்ளும் இடம் பிடித்துள்ளது.

* தேசிய கல்வி நிறுவன தரவரிசை (NIRF) பட்டியல் 2025-ல் சிறந்த பல்கலைகழக தரவரிசையில் 14-வது இடத்திலும், சிறந்த பொறியியல் பாட பிரிவில் 16-வது இடமும், ஆராய்ச்சியில் 14-வது இடமும் பிடித்துள்ளது. ஒட்டுமொத்த தரவரிசை பட்டியலில் 21-வது இடம் பிடித்துள்ளது.

கிராமப்புற அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச கல்வி “ஸ்டார்ஸ்” திட்டம்:

  கிராமப்புற அரசு மேல்நிலைப் பள்ளிகளில், அதிக மதிப்பெண் பெற்றவர்களுக்கு தரமான உயர்கல்வியைத் தொடர சம வாய்ப்புகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்ட “ஸ்டார்ஸ்” (கிராமப்புற மாணவர்களுக்கான உயர்கல்வி வழங்கும் திட்டம்) கடந்த 2008-ல் தொடங்கப்பட்டது.

            2008 முதல் இதுவரை 1200 கிராமப்புற அரசு பள்ளி மாணவர்களுக்கு விஐடி கல்வி நிறுவனத்தில் இலவச மாணவர் சேர்க்கை வழங்கப்பட்டுள்ளது. ஏழை மாணவர்களின் இலவச கல்விக்கு சுமார் ரூ.103 கோடி செலவு அளிக்கப்பட்டுள்ளது.

உயர்கல்விக்கு உதவும் விஐடி அனைவர்க்கும் உயர்கல்வி அறக்கட்டளை:

   வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் உள்ள மேல்நிலை கல்வியை முடித்த அனைத்து ஏழை, எளிய மாணவர்களின் உயர்கல்வி கனவை நனவாக்கும் அனைவர்க்கும் உயர்கல்வி அறக்கட்டளை கடந்த 2012 ஆம் ஆண்டில்  தொடங்கப்பட்டது.

  அனைவர்க்கும் உயர்கல்வி அறக்கட்டளை சார்பில் இதுவரை 4 மாவட்டங்களை சேர்ந்த 11158 மாணவர்களுக்கும் ரூ.14.24 கோடிக்கு மேல் உயர்கல்விக்கு உதவித்தொகையாக வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

     இவ்வாறு அவர் கூறினார்.

   பேட்டியின் போது துணைதலைவர்கள் சங்கர் விசுவநாதன், சேகர் விசுவநாதன், செயல் இயக்குநர் சந்தியா பெண்டாரெட்டி, துணைவேந்தர் காஞ்சனா பாஸ்கரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Comments

Popular posts from this blog

• 25 ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்த பொறியியல் மாணவிகள்.

• கீரை திருவிழா - மக்கள் நல சந்தை.

• ஆக்சிலியம் கல்லூரி போருக்கு எதிரான அமைதி பேரணி.