• 30.11.2026 அன்று சிறப்பு கிராம சபை கூட்டம்.
· 30.11.2026 அன்று வேலூர் மாவட்டத்தில் அனைத்து கிராம ஊராட்சிகளிலும் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சி தலைவர் தெரிவித்துள்ளார்.
அனைத்து கிராம ஊராட்சிகளிலும் சிறப்பு கிராம சபை கூட்டம் நடத்தப்பட வேண்டுமென தெரிவித்துள்ளதை தொடர்ந்து, வேலுார் மாவட்டத்திலுள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் 30.11.2026 அன்று காலை 11.00 மணியளவில் தவறாமல் சிறப்பு கிராம சபை கூட்டம் கூட்டப்பட வேண்டுமென அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கும் மாவட்ட ஆட்சி தலைவர் அவர்களால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இக்கிராம சபை கூட்டத்தில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டிய பொருள்கள் விவரம்.
அரசாணை எண்.172 ஊரக வளர்ச்சி (ம) ஊராட்சி துறை (SGS.1) நாள்: 02.11.2026-ன் படி வெற்றி வீடு திட்டத்தின் கீழ் முதல் கட்டமாக 2026-27ம் நிதி ஆண்டில் 70,000 கூரை வீடுகளை தலா ரூ.5.00 லட்சம் மதிப்பீட்டில் கான்கிரீட் வீடுகளாக மாற்றிட அரசாணை வழங்கப்பட்டது.
சென்னை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்கக ஆணையர் அவர்களின் கடித ந.க.எண்.36472/2026/RHS-1.1, நாள்: 03.11.2026 இன் படி 2026-27-ஆம் ஆண்டு வேலூர் மாவட்டத்திற்கு 3000 வீடுகள் ஒதுக்கீடு செய்து வரப்பெற்றுள்ளது. அதனை தொடர்ந்து (KVVT Resurvey), புதிய குடிசைகள் கணக்கெடுப்பு (New Hut Survey) மற்றும் அனைவருக்கும் வீடு கணக்கெடுப்பு (Housing for all Survey) ஆகிய கணக்கெடுப்புகளில் உள்ள பயனாளிகளில் வீடு வழங்க தகுதியான பயனாளி என தெரிவு செய்யப்பட்ட பட்டியல் கிராம சபையின் ஒப்புதலுக்கு வைக்கப்படுகிறது.
மேற்படி, கிராம சபை கூட்டங்களில் கிராம சபைக் கூட்டம் நடைபெறுவதை கண்காணிக்க ஒன்றிய அளவில் மண்டல அலுவலர்கள் மற்றும் கண்காணிப்பாளர்கள் நியமனம் செய்தும் வேலூர் மாவட்ட ஆட்சி தலைவர் பி.எஸ்.லீலாஅலெக்ஸ் உத்தரவிட்டுள்ளார்.
Comments
Post a Comment