• காட்பாடி அங்கக இயற்கை வேளாண் பொருட்கள் விற்பனை.
· காட்பாடி உழவர் சந்தையில் அங்கக இயற்கை வேளாண் பொருட்கள் விற்பனை - வேலூர் மாவட்ட ஆட்சியர் துவங்கி வைத்தார்.
வேலூர் மாவட்டம், காட்பாடியில் உள்ள உழவர் சந்தையில் ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுகிழமைகளில் மட்டும் வேளாண் துறை சார்பில் இயற்கை அங்கக வேளாண் பொருட்கள் விற்பனை சந்தையை மாவட்ட ஆட்சியர் லீலா அலெக்ஸ் துவங்கி வைத்தார். காட்பாடி சட்டமன்ற உறுப்பினர் சுதாகர் மற்றும் வேளாண் அதிகாரிகள் உடன் இருந்தனர்.
இந்த அங்கக இயற்கை சந்தை மூலம் மக்களுக்கு இயற்கை உயிர் உரங்களை பயன்படுத்தி விளைவிக்கப்பட்ட பாரம்பரிய அரிசிகள், காய்கறிகள், பழங்கள் ஆகியவைகள் கிடைக்கும். இதன் மூலம் மக்களும் நஞ்சில்லா இயற்கை உணவை உண்ண முடியும்.
மேலும் இச்சந்தையில் ஜி-பே மூலம் பணம் செலுத்தி முதல் விற்பனையை ஆட்சியர் லீலா அலெக்ஸ் துவங்கி வைத்து பாரம்பரிய அரிசியை வாங்கி சென்றார். காட்பாடி சட்டமன்ற உறுப்பினரும் பாரம்பரிய அரிசியை வாங்கி சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.


Comments
Post a Comment