• வேலூர் ஆட்சியர் அலுவலகத்தில் வேப்பமரம் முறிந்தது.
· வேலூர் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பெரிய வேப்பமரம் முறிந்து விழுந்ததால் இரண்டு கார்கள் சேதம் - மின் ஒயர்கள் அறுந்தது.
வேலூர் மாவட்டம், வேலூர், சத்துவாச்சாரியில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் முழுவதும் பெரிய பெரிய மரங்களுடன் இயற்கையாக காட்சியளிக்கும்.
இந்த நிலையில் ஆட்சியர் அலுவலகத்தின் பின்புறம் உள்ள பெரிய வேப்பமரம் ஒன்று திடீரென முறிந்து கீழே நிறுத்தப்பட்டிருந்த கார்கள் மீது விழுந்தது. இதில் ஆட்கள் யாருமில்லாததால் யாருக்கும் காயமில்லை. உயிர் சேதமுமில்லை.
இருப்பினும் மரங்கள் விழுந்ததால் ஆட்சியர் அலுவலகத்தின் மின் ஒயர்கள் அறுந்தது. நல்வாய்ப்பாக மக்களுக்கு பாதிப்பில்லை. மரத்தை அகற்றும் பணியில் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். மரம் விழுந்ததில் இரண்டு கார்கள் மட்டும் சேதமடைந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Comments
Post a Comment