• மகளிர் சுய உதவி குழு நிதி, மின்கல இயக்க வாகனங்கள்.

  • வேலூர் கற்பகம் கூட்டுறவு  சிறப்பங்காடியில்  ரூ.100க்கு 10 வகையான காய்கறிகள் அடங்கிய  வெற்றி  சிறப்பு காய்கறி தொகுப்பு  விற்பனையை தொடங்கி வைத்து, வேலூர் மாநகராட்சி திடக்கழிவு மேலாண்மை பணிக்கு 3 தனியார் நிறுவனங்களின் சமூக பொறுப்பு நிதியிலிருந்து ரூ.50 இலட்சம் மதிப்பில் 25 மின்கல இயக்க  வாகனங்களை பயன்பாட்டிற்கு கொடியசைத்து தொடங்கி வைத்து, வேலூர் மாவட்டத்தில்  585  மகளிர் சுய உதவி குழுக்களுக்கு தொழில் முனைவோருக்கான ரூ.63.30 கோடி வங்கி நிதி இணைப்புகளுக்கான தொகைகளை கைத்தறி, துணிநூல் மற்றும் கதர்துறை அமைச்சர் வழங்கினார்.

                வேலூர் கற்பகம் கூட்டுறவு சிறப்பங்காடியில் ரூ.100க்கு 10 வகையான காய்கறிகள் அடங்கிய வெற்றி சிறப்பு காய்கறி தொகுப்பு விற்பனையை கைத்தறி, துணிநூல் மற்றும் கதர்த்துறை அமைச்சர் ம.விஜய்பாலாஜி தொடங்கி வைத்தார். இந்த சிறப்பு காய்கறி தொகுப்பில் பெரிய வெங்காயம் 500 கிராம், தக்காளி 500 கிராம், கத்தரிக்காய் 250 கிராம், உருளை கிழங்கு 250 கிராம், கேரட் 200 கிராம், பீன்ஸ் 200 கிராம், பச்சை மிளகாய் 100 கிராம், எலுமிச்சை 100 கிராம், இஞ்சி 50 கிராம், தேங்காய் 400-450 கிராம் ஆகியவை அடங்கும். இந்த சிறப்பு காய்கறி தொகுப்பு விநியோகம் செய்யப்படவுள்ளது.  

தொடர்ந்து, கைத்தறி, துணிநூல் மற்றும் கதர்துறை அமைச்சர் வேலூர் மாநகராட்சி திடக்கழிவு மேலாண்மை பணிக்கு 3 தனியார் நிறுவனங்களின் சமூக பொறுப்பு நிதியிலிருந்து ரூ.50 இலட்சம் மதிப்பில் 25  மின்கல இயக்க  வாகனங்களை பயன்பாட்டிற்கு  கொடியசைத்து தொடங்கி  வைத்தார்.

அதனை தொடர்ந்து, கைத்தறி, துணிநூல் மற்றும் கதர்துறை அமைச்சர் வேலூர் மாவட்டத்தில் 585 மகளிர் சுய உதவி குழுக்களுக்கு தொழில் முனைவோருக்கான ரூ.63.30 கோடி வங்கி நிதி இணைப்புகளுக்கான தொகைகளை ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் கைத்தறி, துணிநூல் மற்றும் கதர்த்துறை அமைச்சர் ம.விஜய் பாலாஜி, தெரிவித்ததாவது.

தமிழ்நாடு முதலமைச்சர் இத்திட்டத்தை ஈரோடு மாவட்டத்தில் தொடங்கி வைத்தார். வேலூர் மாவட்டத்தில் இருக்கும் சிங்கப் பெண்கள் நீங்கள் ஒட்டுமொத்தப் பெண் சமுதாயத்துக்கும் ஒரு எடுத்துக்காட்டாக இருக்கீறிர்கள். சுய உதவிக்குழு என்பது நீங்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து ஒரு நிறுவனத்தை உருவாக்கி அந்த நிறுவனத்தை மேம்படுத்தி, உங்களால் பல மகளிருக்கு வேலைவாய்ப்பை உருவாக்கி, நமது வருமானத்தில் நமது வாழ்வாதாரத்தை மேம்படுத்தனும் உணர்வு  உங்களிடம் உள்ளது.  அந்த உணர்விற்குத் தமிழ்நாடு அரசு தலைவணங்குகிறது.

நிச்சயம் மகளிர் வாழ்வாதாரம் மேம்படுவதற்கு தேவையான அனைத்து அத்தனை நடவடிக்கைகளும் தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையிலான அரசு உங்களோடு உறுதுணையாக நிற்கும். இத்திட்டத்தின் மூலம் வழங்கப்படும் காசோலை உங்களுடைய வாழ்வாதாரம் மேம்படுவதற்கும், உங்களைப் போல் உள்ள மற்ற பெண்களுக்கு நீங்க எடுத்துக்காட்டாக  இருக்க வேண்டும் .

நிச்சயம் வருகாலங்களில் உங்களுக்கு வசந்த காலமாக இருக்கும் என்பதை இந்த நேரத்தில் தெரிவித்து கொண்டு, இன்னைக்கு இந்த சிறப்பு நிதியை பெற வந்திருக்க கூடிய பயனாளிகள் உங்கள் அனைவருக்கும் நன்றி என கைத்தறி, துணிநூல் மற்றும் கதர்துறை அமைச்சர்  ம.விஜய் பாலாஜி, தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் வேலூர் மாவட்ட ஆட்சி தலைவர் பி.எஸ்.லீலா அலெக்ஸ், வேலூர் மாநகராட்சி ஆணையாளர் அ.கேத்திரின் சரண்யா, சட்டமன்ற உறுப்பினர்கள்  மு.ம.வினோத் கண்ணன் (வேலூர்),  மரு.ம.சுதாகர் (காட்பாடி), ஏ.தென்றல்குமார் (கீ.வ.குப்பம்), க.சிந்து (குடியாத்தம்), எஸ்.எம்.சுகுமார் (ஆற்காடு), மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ந.உ.சிவராமன், மாவட்ட வன அலுவலர் அசோக்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் மரு.து.சுரேஷ், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் திருகுணஐயப்பத்துரை, மகளிர் திட்ட இயக்குநர் பா.ஜெயசுதா துறை சார்ந்த அலுவலர்கள் உட்பட பலர்  கலந்து கொண்டனர்.

 

Comments

Popular posts from this blog

• 25 ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்த பொறியியல் மாணவிகள்.

• கீரை திருவிழா - மக்கள் நல சந்தை.

• ஆக்சிலியம் கல்லூரி போருக்கு எதிரான அமைதி பேரணி.