• அரியூரில் மாநில அளவிலான சதுரங்க போட்டிகள்.
· அரியூரில் மாநில அளவிலான சதுரங்க போட்டிகள்.
வேலூர் மாவட்டம், அரியூர் நாராயணி பள்ளி வளாகத்தில் மாநில அளவிலான மாணவ, மாணவிகளுக்கான சதுரங்க போட்டிகள் நடைபெற்றது. இதில் 8, 10, 12, 14, 16 ஆகிய வயது பிரிவுகளின் கீழ் ஆண்கள், பெண்கள் தனித்தனியாக போட்டிகள் நடைபெற்றது. இதில் மாநிலம் முழுவதுமிருந்து 800 மாணவ, மாணவிகள் பங்கேற்று விளையாடினார்கள்.
இப்போட்டியினை அரியூர் தங்ககோவில் நாராயணி ஆலயத்தின் நிர்வாகி சுரேஷ் துவங்கி வைத்தார்.
வெற்றி பெற்றவர்களுக்கு இங்கிலாந்து நாட்டை சேர்ந்த எட்வர்ட்லூயி பரிசுகளையும், சான்றுகளையும், கோப்பைகளையும் வழங்கினார். இவ்விழாவில் பாரதி செஸ் சங்க தலைவர் தினகரன் மற்றும் பிரகாஷ் கார்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதில் 8 வயது பெண்கள் பிரிவில் திருவள்ளூரை சேர்ந்த நிதர்சனாவும், ஆண்கள் பிரிவில் ராணிப்பேட்டையை சேர்ந்த பவந்த்தும், 10 வயது பிரிவில் சென்னையை சேர்ந்த சாலைவினவனும், பெண்கள் பிரிவில் ராணிப்பேட்டை கார்த்தியாயினியும் முதலிடம் வென்றனர்.
12 வயது பிரிவில் திருப்பத்தூர் வினித்தும், பெண்கள் பிரிவில் ராணிப்பேட்டை ஐஸ்வர்யாவும் வென்றனர். 14 வயது பிரிவில் ஆண்கள் ராணிப்பேட்டை அர்ஜுனும், பெண்கள் பிரிவில் வேலூர் ரூபிகாவும், 16 வயது வேலூரை சேர்ந்த சச்சினும், பெண்கள் பிரிவில் திருவண்ணாமலையை சேர்ந்த கீர்த்தனா ஆகியோர் முதலிடம் வென்றனர்.

Comments
Post a Comment