• மாணவ, மாணவிகளுக்கு வினாடி வினா, கட்டுரை போட்டி
· வேலூரில் வாக்காளர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் வினாடி வினா மற்றும் கட்டுரை போட்டி - திரளான மாணவ, மாணவிகள் பங்கேற்பு.
வேலூர் மாவட்டம், வேலூர், சத்துவாச்சாரியில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தல் ஆணையம் சார்பில் வாக்காளர் சிறப்பு சுருக்க திருத்தம் குறித்து விழிப்புணர்வை உருவாக்க மாணவ, மாணவிகளுக்கு கட்டுரை போட்டி மற்றும் வினாடி வினா போட்டிகள் நடத்தப்பட்டன. போட்டிகளை தேர்தல் வட்டாட்சியர் ரமேஷ் துவங்கி வைத்தார். இதில் மாவட்டம் முழுவதுமிருந்து மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் பங்கேற்று வினாடி வினா கட்டுரை போட்டிகளில் பங்கேற்றனர்.

Comments
Post a Comment