• அத்தியாவசிய பொருட்கள் இருப்பு வரம்பு நிர்ணயம்.
- அத்தியாவசியப் பொருட்கள் இருப்பு வரம்பு நிர்ணயம்.
அத்தியாவசியப் பொருட்களான துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு, நெல் / அரிசி, மற்றும் சர்க்கரை ஆகியவற்றின் சீரான விநியோகத்தைப் பராமரிக்கவும், அவை நியாயமான விலையில் சமமாகக் கிடைப்பதை உறுதி செய்யவும், அத்தியாவசியப் பொருட்கள் சட்டம், 1955-இன் பிரிவு 3-இன் கீழ் இருப்பு வரம்பு நிர்ணயம் செய்து தமிழ்நாடு அரசால் ஆணைகள் பிறப்பிக்கப்பட்டு, 13.11.2026 நாளிட்ட தமிழ்நாடு அரசு சிறப்பு அரசிதழ்களில் (எண்.486, 487 மற்றும் 490) வெளியிடப்பட்டுள்ளன. இவ்வாணைகள் தமிழ்நாடு முழுவதும் நடைமுறைக்கு வந்துள்ளன.
மேற்படி ஆணைகளின்படி, ஒவ்வொரு பொருளுக்கும் வணிகர் வகை வாரியாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ள இருப்பு வரம்பு விவரங்கள் கீழ்க்கண்டவாறு:
|
வ.எ |
வணிகர் வகை |
அனுமதிக்கப்பட்ட அதிகபட்ச இருப்பு வரம்பு |
|
I. நெல் / அரிசி (அரசாணை (நிலை) எண்.93, கூ.உ.ம.நு.பா.(பி1) துறை, நாள் 13.11.2026 – இருப்பு வரம்பு காலம்: 31.01.2027 வரை |
||
|
1 |
மொத்த விற்பனையாளர் |
2000 மெட்ரிக் டன் நெல் / அரிசி |
|
2 |
சில்லறை விற்பனையாளர் |
ஒவ்வொரு சில்லறை விற்பனை நிலையத்திற்கும் 8 மெட்ரிக் டன் |
|
3 |
பெரிய சங்கிலித் தொடர் சில்லறை விற்பனை கடைகள் |
ஒவ்வொரு விற்பனை நிலையத்திற்கும் 8 மெட்ரிக் டன் வரை (அதிகபட்சம் 8 x மொத்த விற்பனை நிலையங்களின் எண்ணிக்கை மெட்ரிக் டன்) |
|
4 |
அரவை ஆலை உரிமையாளர் |
ஒரு மாத உற்பத்தித் திறனுக்கு மிகாமல் |
|
5 |
இறக்குமதியாளர் |
சுங்க அனுமதி பெற்ற நாளிலிருந்து 45 நாட்களுக்கு மேல் இறக்குமதி இருப்பை வைத்திருக்கக் கூடாது |
|
6 |
பதப்படுத்துபவர் (Processor) |
மாதாந்திர நிறுவு திறனில் 60 சதவீதம் x ஜனவரி 2027 வரை உள்ள மீதமுள்ள மாதங்கள் |
|
II. துவரம் பருப்பு மற்றும் உளுத்தம் பருப்பு (அரசாணை (நிலை) எண்.92, கூ.உ.ம.நு.பா.(எப்1) துறை, நாள் 13.11.2026 – இருப்பு வரம்பு காலம்: அறிவிக்கை நாளிலிருந்து 3 மாதங்கள்) |
||
|
1 |
மொத்த விற்பனையாளர் |
ஒவ்வொரு பருப்பு வகைக்கும் 200 மெட்ரிக் டன் |
|
2 |
சில்லறை விற்பனையாளர் |
ஒவ்வொரு பருப்பு வகைக்கும் 5 மெட்ரிக் டன் |
|
3 |
பெரிய சங்கிலித் தொடர் சில்லறை விற்பனை கடைகள் |
ஒவ்வொரு விற்பனை நிலையத்திலும் 5 மெட்ரிக் டன் மற்றும் ஒவ்வொரு கிடங்கிலும் 200 மெட்ரிக் டன் (ஒவ்வொரு பருப்பு வகைக்கும்) |
|
4 |
அரவை ஆலை உரிமையாளர் |
கடந்த 3 மாத உற்பத்தி அல்லது ஆண்டு நிறுவு திறனில் 25 சதவீதம் – இவற்றில் எது அதிகமோ அது |
|
5 |
இறக்குமதியாளர் |
சுங்க அனுமதி பெற்ற நாளிலிருந்து 45 நாட்களுக்கு மேல் இறக்குமதி இருப்பை வைத்திருக்கக் கூடாது |
|
III. சர்க்கரை (அரசாணை (நிலை) எண்.95, கூ.உ.ம.நு.பா.(டி2) துறை, நாள் 13.11.2026 (இந்திய அரசு அறிவிக்கை S.O.5461(E), நாள் 06.10.2026) – 15.10.2026 முதல் நடைமுறை) |
||
|
1 |
சர்க்கரை வணிகர் |
பெறப்பட்ட நாளிலிருந்து 15 நாட்களுக்கு மேல் எந்த இருப்பையும் வைத்திருக்கக் கூடாது. எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் 1000 குவிண்டாலுக்கு மேல் இருப்பு வைத்திருக்கக் கூடாது. |
துவரம் பருப்பு மற்றும் உளுத்தம் பருப்பு இருப்பு வைத்துள்ள வணிகர்கள் / நிறுவனங்கள் தங்களது இருப்பு விவரங்களை மத்திய அரசின் நுகர்வோர் விவகாரத் துறையின் fcainfoweb.nic.in/psp என்ற இணைய-தளத்திலும், நெல் / அரிசி மற்றும் சர்க்கரை இருப்பு வைத்துள்ளவர்கள் foodstock.dfpd.gov.in என்ற இணையதளத்திலும், பதிவு செய்ய வேண்டும். நிர்ணயிக்கப்பட்ட வரம்பைவிட கூடுதலாக இருப்பு வைத்திருப்பவர்கள், அதனை நிர்ணயிக்கப்பட்ட இருப்பு வரம்பிற்குள் உடனடியாகக் குறைத்துக்கொள்ள வேண்டும். மேலும், இருப்பு விவரங்களைத் தொடர்ந்து மேற்படி இணையதளத்தில் பதிவு செய்து புதுப்பித்து வர வேண்டும். சர்க்கரை வணிகர்கள் மேற்குறிப்பிட்ட கால அளவு மற்றும் இருப்பு அளவு வரம்பைக் கடைபிடிக்க வேண்டும்.
எனவே, வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து நெல் / அரிசி, பருப்பு மற்றும் சர்க்கரை மொத்த விற்பனையாளர்கள், சில்லறை விற்பனையாளர்கள், பெரிய சங்கிலித் தொடர் சில்லறை விற்பனை கடைகள், அரவை ஆலை உரிமையாளர்கள், பதப்படுத்துபவர்கள் மற்றும் இறக்குமதியாளர்கள் மேற்படி அரசு ஆணைகளைத் தவறாது கடைபிடித்து, நிர்ணயிக்கப்பட்ட இருப்பு வரம்பிற்குள் மட்டுமே இருப்பு வைத்திருக்குமாறும், இருப்பு விவரங்களை உரிய இணையதளத்தில் உடனுக்குடன் பதிவு செய்யுமாறு மாவட்ட ஆட்சி தலைவர் பி.எஸ்.லீலாஅலெக்ஸ், தெரிவித்துள்ளார்.
Comments
Post a Comment