• காட்பாடி ஊராட்சி ஒன்றிய பணிகள் ஆய்வு.

  • காட்பாடி ஊராட்சி ஒன்றியத்தில் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து வேலூர் மாவட்ட ஆட்சி தலைவர் ஆய்வு மேற்கொண்டார்.

வேலூர் மாவட்டம், காட்பாடி ஊராட்சி ஒன்றியத்தில் நியாய விலை கடை,  அங்கன்வாடி மையம், வெற்றி வீடுகள்  திட்டம் குறித்து வேலூர் மாவட்ட ஆட்சி தலைவர் பி.எஸ்.லீலா அலெக்ஸ் ஆய்வு மேற்கொண்டார்.

வேலூர் மாவட்டம், காட்பாடி ஊராட்சி ஒன்றியம், சேவூர் ஊராட்சி, சேவூர் நியாய விலை கடையை பார்வையிட்டு, அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் தரம் மற்றும் இருப்பு குறித்து வேலூர் மாவட்ட ஆட்சி தலைவர் ஆய்வு செய்தார். மேலும், முதியோர் உதவி தொகை பெறுபவர்களுக்கு வழங்கப்படும் வேட்டி, சேலைகளை ஆய்வு செய்தார். பொதுமக்களிடம் அத்தியாவசிய பொருட்கள் முறையாக வழங்கப்படுகிறதா என கேட்டறிந்தார்.

சேவூர் அங்கன்வாடி மையத்தை பார்வையிட்டு ஆய்வு செய்து, குழந்தைகளின் வருகை, எண்ணிக்கை, எடை, உயரம், ஊட்டச்சத்து நிலை குறித்து கேட்டறிந்தார். குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவின் தரத்தை சுவைத்து பார்த்து ஆய்வு செய்தார்.

பிரம்மபுரம் மற்றும் கரிகிரி ஆகிய பகுதிகளில் வெற்றி வீடுகள் திட்டத்தில் தகுதியுள்ள பயனாளிகளை தேர்வு செய்யப்பட்டுள்ளதை  நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். மேலும், நரிக்குறவர்களுக்கு வீடுகள் வழங்குவது குறித்து  ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின்போது காட்பாடி வட்டாட்சியர் பாலசந்தர், வட்டார வளர்ச்சி அலுவலர் வின்சென்ட்  ரமேஷ் பாபு உட்பட பலர் உடனிருந்தனர்.

 

Comments

Popular posts from this blog

• 25 ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்த பொறியியல் மாணவிகள்.

• கீரை திருவிழா - மக்கள் நல சந்தை.

• ஆக்சிலியம் கல்லூரி போருக்கு எதிரான அமைதி பேரணி.