• வேலூர் வாக்காளர் சிறப்பு சுருக்க திருத்தம் ஆலோசனை கூட்டம்.
· வேலூர் மாவட்ட வாக்காளர் பட்டியல் பார்வையாளர் மற்றும் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை ஆணையர் அனந்தகுமார் தலைமையில் வாக்காளர் சிறப்பு சுருக்க திருத்தம் ஆலோசனை கூட்டம்.
வேலூர் மாவட்டம், சத்துவாச்சாரியில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வேலூர் மாவட்டத்தில் வாக்காளர் சிறப்பு சுருக்க திருத்தம் 2027-ன் கீழ் நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் குறித்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடனான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
வேலூர் மாவட்ட வாக்காளர் பட்டியல் பார்வையாளர் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை (பயிற்சி) ஆணையர் டாக்டர் அனந்தகுமார் தலைமையில், வேலூர் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சி தலைவர் லீலாஅலெக்ஸ் முன்னிலையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் வேலூர் மாநகராட்சி ஆணையாளர் கேத்திரின் சரண்யா, மாவட்ட வருவாய் அலுவலர் சுரேஷ், தேர்தல் வட்டாட்சியர் ரமேஷ் மற்றும் தவெக, திமுக, அதிமுக, காங்கிரஸ், பாஜக, தேமுதிக உட்பட அரசியல் கட்சியினர் பலர் கலந்து கொண்டு பல்வேறு கருத்துக்களை தெரிவித்தனர்.


Comments
Post a Comment