• வேலூர் முன்னாள் படைவீரர்கள் குறை தீர்வு கூட்டம்.

·        வேலூர் மாவட்டத்தை சார்ந்த முன்னாள் படைவீரர்கள், படைவீரர் மற்றும் அவர்களை சார்ந்தோர்களுக்கான சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டம்.

வேலூர் மாவட்டத்தைச் சார்ந்த முன்னாள் படைவீரர்கள், படைவீரர் மற்றும் அவர்களை சார்ந்தோர்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் மரு.து.சுரேஷ் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக காயிதே மில்லத்  கூட்டரங்கில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் அரசு அலுவலர்கள் மற்றும் முன்னாள் படைவீரர்கள் / சார்ந்தோர்கள் 120 நபர்கள் கலந்து கொண்டார்கள். மேலும் முன்னாள் படைவீரர்கள் மற்றும் சார்ந்தோர்களிடமிருந்து நிலம், குடும்ப ஓய்வூதியம், போலீஸ் பாதுகாப்பு, வேலைவாய்ப்பு போன்ற பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 48 நபர்கள் மாவட்ட வருவாய் அலுவலர்-டம் மனுக்கள் அளித்தனர். அம்மனுக்கள்மீது சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

இக்கூட்டத்தில் 10 பயனாளிகளுக்கு ரூ.2,50,000/- மதிப்பில் கல்வி உதவி தொகையினை மாவட்ட  வருவாய் அலுவலர் வழங்கினார்.  

இக்கூட்டத்தில் முன்னாள் படை வீரர்கள் நலன் துணை இயக்குநர் லெப்டினன்ட் கர்னல் வேலு உட்பட பலர் கலந்து கொண்டனர்.

 

Comments

Popular posts from this blog

• 25 ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்த பொறியியல் மாணவிகள்.

• கீரை திருவிழா - மக்கள் நல சந்தை.

• ஆக்சிலியம் கல்லூரி போருக்கு எதிரான அமைதி பேரணி.