• அரியூர் ஸ்ரீ சேஷ சாய் பாபா ஆலய மஹா கும்பாபிஷேகம்

 ·         அரியூர் ஸ்ரீ சேஷ சாய் பாபா ஆலய மஹா கும்பாபிஷேகம் - திரளான பக்தர்கள் சாமி தரிசனம்.

       வேலூர் மாவட்டம், அரியூரில் அமைந்துள்ள ஸ்ரீ சேஷ சாய்பாபா ஆலயத்தின் மஹா கும்பாபிஷேகமானது நடைபெற்றது. பல்வேறு புண்ணிய நதிகளிலிருந்து கொண்டு வரப்பட்ட புனித நீரானது கலசங்களில் வைத்து யாக சாலையில் வேத மந்திரங்கள் முழங்க பூஜைகள் நடைபெற்றது.

     பின்னர் பூர்ணாஹூதி தொடர்ந்து மேளதாளங்கள் முழங்க புனித நீர் கலசங்கள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு ஸ்ரீ சேஷ சாய்பாபா மீது புனித நீரை ஊற்றி மகா கும்பாபிஷேகமானது நடைபெற்றது. இதில் தங்ககோவில் அறங்காவலர் சுரேஷ், காங்கிரஸ் மாவட்ட தலைவர் வாஹீத் பாஷா மற்றும் சோமு, ராகுல்கணேஷ் உள்ளிட்டோரும் திரளான பக்தர்களும் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

 

Comments

Popular posts from this blog

• 25 ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்த பொறியியல் மாணவிகள்.

• கீரை திருவிழா - மக்கள் நல சந்தை.

• ஆக்சிலியம் கல்லூரி போருக்கு எதிரான அமைதி பேரணி.