• பள்ளிகொண்டா, குடியாத்தம் நகராட்சி பகுதிகளில் ஆய்வு.
· பள்ளிகொண்டா மற்றும் குடியாத்தம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து வேலூர் மாவட்ட ஆட்சி தலைவர் ஆய்வு. வேலூர் மாவட்ட ஆட்சி தலைவர் பி.எஸ்.லீலாஅலெக்ஸ், பள்ளிகொண்டா மற்றும் குடியாத்தம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். வேலூர் மாவட்ட ஆட்சி தலைவர் மாவட்ட அரசு மாதிரி பள்ளி கட்டுவதற்கான நிரந்தர இடம் தேர்வு செய்வது குறித்து பள்ளிகொண்டா அரசினர் ஆண்கள் மேல்நிலை பள்ளி யின் இடத்தினை பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து சி-2063 குடியாத்தம் வட்ட வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தின் மரச்செக்கு எண்ணெய் தயாரிப்பு நிலையம் மற்றும் சூரிய ஒளி உலர்களத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது சூரிய ஒளி உலர்களம் மற்றும் எண்ணெய் பிழியும் இயந்திரத்தின் கொள்ளளவு குறித்து கேட்டறிந்தார். உலர்களத்தின் கொள்ளளவு-7500 தேங...