Posts

• வேலூர் மாவட்ட மக்கள் குறை தீர்வு நாள் கூட்டம்

Image
·         வேலூர் மாவட்ட மக்கள் குறை தீர்வு நாள் கூட்ட ம் - மாவட்ட ஆட்சி தலைவர் பொதுமக்களிடம் 669     கோரிக்கை மனுக்களைப் பெற்றார்.  வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக காயிதே மில்லத் கூட்டரங்கில் மக்கள் குறை தீர்வு நாள் கூட்டம் மாவட்ட ஆட்சி தலைவர் பி.எஸ்.லீலா அலெக்ஸ் தலைமையில்   நடைபெற்றது . மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து வருவாய் துறை நிலப்பட்டா , பட்டா மாறுதல் , இலவச வீட்டு மனைப்பட்டா , முதியோர் உதவி தொகை வேளாண்மை துறை , காவல் துறை , ஊரக வளார்ச்சி துறை , நகராட்சி நி ரு வாகங்கள் , பேரூராட்சி துறை , கூட்டுறவு கடனுதவி , தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் சார் பாக வீடுகள் வேண்டி , மின்சார துறை சார்பான குறைகள் , மாற்று திறனாளிகள் நலத்துறை . மருத்துவ துறை , கிராம பொதுப்பிரச்சனைகள் , குடிநீர் வசதி , வேலைவாய்ப்பு வேண்டி மனுக்கள் மற்றும் பொதுநலன் குறித்த மனுக்கள் என 669 மனுக்களை மாவட்ட ஆட்சி தலைவர் பொதுமக்கள் மற்றும் மாற்று திறனாளிகளிடமிருந்து பெற்று கொண்டு சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி மனுக்கள்...

• மதுபானங்களை பாட்டிலில் விற்க கூடாது - விவசாயிகள் மனு.

Image
 ·          பேர்ணாம்பட்டு பகுதியில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிர்ப்பு.    ·          மதுபானங்களை பாட்டிலில் விற்க கூடாது என விவசாயிகள் மனு.       வேலூர் மாவட்டம் , வேலூர், சத்துவாச்சாரியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் மாநில பொதுசெயலாளர் உதயகுமார் தலைமையில் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மனு அளித்தனர்.       அதில் பேர்ணாம்பட்டு பகுதியில் பொது சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். சின்னதாமல்செருவு ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் பேர்ணாம்பட்டு நகராட்சி கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்தினை அங்கு அமைக்கவுள்ளனர். இதனால் நிலத்தடி நீர் மாசடைந்தும் சுற்றுசூழல் பாதிப்பும் ஏற்படுகிறது. மேலும் வஜ்ஜிரம் தோல் தொழிற்சாலை கழிவுகளும் இப்பாசன நிலத்தடி நீருக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது. ஏரியிலும் இந்த தண்ணீரை விடுவதால் பாதிப்பு ஏற்படுகிறது. ...

• சிறை மற்றும் சீர்திருத்த நிர்வாக பயிலக பயிற்சி துவக்க விழா.

Image
 ·          சிறை அதிகாரிகள் மன ஆரோக்கியம், உடல் ஆரோக்கியத்திலும் அக்கறை செலுத்தி அதற்கான நேரத்தினை செலவிட வேண்டும்.   ·          சிறை மற்றும் சீர்திருத்த நிர்வாக பயிலகத்தின் பயிற்சி துவக்க விழாவில் சி . எம் . சி மருத்துவமனை இயக்குநர் பிஜு ஜார்ஜ் பேச்சு.      வேலூர் மாவட்டம் , தொரப்பாடியில் உள்ள சிறை மற்றும் சீர்திருத்த நிர்வாக பயிலகத்தில் சிறை அலுவலர்களுக்கான வாழ்க்கை மேலாண்மை குறித்து மூன்று மாதங்கள் பயிற்சி துவக்க விழா நடைபெற்றது.     சிறை மற்றும் சீர்திருத்த நிர்வாக பயிலகத்தின் இயக்குநர் பிரதீப் தலைமையில் நடைபெற்ற விழாவில் பேராசிரியர் ப்யூலா மற்றும் ஆந்திரா , குஜராத் , தமிழ்நாடு ஆகிய மாநிலங்களை சேர்ந்த 22 சிறை அதிகாரிகளும் பங்கேற்றனர்.            இப்பயிற்சியினை வேலூர் சி . எம் . சி மருத்துவமனை இயக்குநர் டாக்டர் பிஜுஜார்ஜ் துவங்கி வைத்தார்        ...

• வேலூர் சுற்றுலா இடங்கள் சர்வதேச வீடியோ.

Image
 ·          வேலூர் மாவட்ட சுற்றுலா இடங்கள் குறித்து விரைவில் சர்வதேச அளவில் கொண்டு செல்லும் நோக்கில் வீடியோ வெளியிடவுள்ளோம்.   ·          இயற்கை சார்ந்த இடங்கள் குறித்து வேலூர் மாவட்ட மக்களும் கருத்துக்களை கூறலாம்   ·          உலக சுற்றுலா தின விழா போட்டிகளில் வென்றவர்களுக்கு பரிசுகள், சான்றுகளை வழங்கி வேலூர் மாவட்ட ஆட்சியர் பேச்சு.       வேலூர் மாவட்டம் , வேலூர், கோட்டைவெளி பூங்காவில் உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு சுற்றுலா துறை சார்பில் பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கான ஓவிய போட்டிகள், மாணவர்களுக்கான பேச்சு போட்டிகள், நாடகம் மற்றும் வில்லுப்பாட்டு ஆகிய கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது. இதில் திரளான மாணவ , மாணவிகளும், பொதுமக்களும் கலந்து கொண்டனர்.             வேலூர் மாவட்ட ஆட்சியர் லீலாஅலெக்ஸ் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவ...

• வேலூர் மாவட்டத்தில் தனியார் வேலை வாய்ப்பு முகாம்.

Image
வேலூர் மாவட்டத்தில் மாபெரும் தனியார் வேலை வாய்ப்பு முகாம் - மாவட்ட ஆட்சி தலைவர் தொடங்கி வைத் து, 25 வேலை நாடுநர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார். இம்முகாமில்   3, 572 வேலை நாடுநர்கள் கலந்து கொண்டு, 1,3 64 நபர்கள் தனியார் துறைகளில் வேலைவாய்ப்பினை பெற்றுள்ளனர். வேலூர் மாவட்ட ம்,   காட்பாடி , விஐடி பல்கலைகழகத்தில்   வேலூர் மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் இணைந்து நடத்தும் மாபெரும் தனியார் வேலை வாய்ப்பு முகாமை மாவட்ட ஆட்சி தலைவர் பி.எஸ். லீலாஅலெக்ஸ் தொடங்கி வைத் தார். படித்த இளைஞர்கள் பல்வேறு தனியார் துறை நிறுவனங்களில் உள்ள பணியிடங்களை பெற்றிட ஏதுவாக தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்கள், மாவட்ட வேலைவாய்ப்பு (ம) தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் வாயிலாக நடத்தப்பட்டு வருகிறது. மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தின் மூலமாக செயல்படுகின்ற தன்னார்வ பயிலும் வட்டத்தில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும்   தேர்வுகளுக்கு   கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள்   நடத்தப்படுகிறது....