Posts

• ஜெருசலேம் மானியம் பெற விண்ணப்பம்.

ஜெருசலேம் புனித பயணம் மேற்கொண்ட அனைத்து பிரிவினரையும் உள்ளடக்கிய கிறித்தவர்களுக்கு வழங்கப்படும் மானியம் பெற விண்ணப்பித்து பயனடைய வேலூர் மாவட்ட ஆட்சி தலைவர் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டை சேர்ந்த அனைத்து பிரிவினரையும் உள்ளடக்கிய 600 கிறித்தவர்கள் பயனடையும் வகையில் ஜெருசலேம் புனித பயணம் மேற்கொண்டு திரும்பிய 550 கிறித்தவர்களுக்கு நபர் ஒருவருக்கு ரூ.37,000/- வீதமும் 50 கன்னியஸ்திரிகள்/ அருட்சகோதரிகளுக்கு நபர் ஒருவருக்கு ரூ.60,000/- வீதமும் ECS முறையில் நேரடியாக மானியம் வழங்கும் திட்டத்தின் கீழ் நடப்பு ஆண்டில் ஜெருசலேம் புனித பயணம் மேற்கொண்டு திரும்பும் கிறித்தவ மத பயனாளிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இதற்கான விண்ணப்பப் படிவத்தினை வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக முதல் தளத்தில் உள்ள மாவட்ட சிறுபான்மையினர் நல அலுவலகத்திலிருந்து கட்டணமின்றி பெறலாம். மேலும் www.bcmbcmw.tn.gov.in என்ற இணைய தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்த விண்ணப்பத்தினை 31.01.2027-க்குள் உரிய ஆவணங்களுடன் ஆணையர், சிறுபான்மையினர் நலத்துறை, கலசமஹால் பாரம்பரிய கட்டடம் முதல் த...

• வேலூர் சுகாதார ஆய்வாளர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்.

Image
 ·          வேலூர் சுகாதார ஆய்வாளர்கள் கவன ஈர்ப்பு பெருந்திரள் முறையீடு ஆர்ப்பாட்டம்.            வேலூர் மாவட்டம் , வேலூர், சத்துவாச்சாரியில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட சுகாதார அலுவலகம் முன்பாக தமிழ்நாடு சுகாதார ஆய்வாளர்கள் சங்கம் சார்பில் மாவட்ட தலைவர் சரவணன் தலைமையில் ஆர்பாட்டம் நடைபெற்றது. இதனை மாநில செயற்குழு உறுப்பினர் சந்திரன் துவங்கி வைத்தார். இதில் சுகாதார ஆய்வாளர்களின் பதவி உயர்வு பணியிடங்களான தொழில்நுட்ப நேர்முக உதவியாளர் , மாவட்ட நலகல்வியாளர் , மருத்துவமல்லா மேற்பார்வையாளர் மற்றும் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ஆகியவற்றை நிரப்புவதில் நிலவும் அலட்சியப்போக்கை கைவிட்டு உடனடியாக இப்பணியிடங்களை நிரப்பிடுக. காய்ச்சல் / டெங்கு தடுப்பு நேரடி களப்பணி இடங்களான சுகாதார ஆய்வாளர் நிலை -2 பணியிடங்கள் பெருமளவு காலியாக இருப்பதை உடனடியாக நிரப்பிட நடவடிக்கை எடுத்திடு. டெங்கு / காய்ச்சல் கட்டுப்பாட்டு பணிகளில் குளோரினே...

• வேலூர் மாற்று திறனாளிகள் நல அலுவலக உதவி வரவேற்பாளர் பணியிடம்.

·         வேலூர் மாவட்ட மாற்று திறனாளிகள் நல அலுவலகத்தில் காலியாக உள்ள உதவி வரவேற்பாளர் ( Assistant Receptionist) பணியிடத் திற்கு தகுதியான மாற்று திறனாளிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது - வேலூர் மாவட்ட ஆட்சி தலைவர் . வேலூர் மாவட்ட மாற்று திறனாளிகள் நல அலுவலகத்தில் காலியாக உள்ள உதவி வரவேற்பாளர் ( Assistant Receptionist) பணியிடத்தினை நிரப்பிட ஏதுவாக ,   மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பு (பெண்) (MBC & DNC -(W)) என்ற இனசுழற்சி முறைப்படி , கீழ்காணும் நிபந்தனைகள் மற்றும் கல்வித் தகுதிகள் அடிப்படையில் பணியிடம் நிரப்பப்படவுள்ளது. இப்பணியிடத்திற்கான ஊதியம் ரூ.15 ,900/- முதல் ரூ.50 ,400/- ( Level-2) வரை ஊதிய விகிதத்தில் தோற்றுவிக்கப்பட்டுள்ளது. எனவே , இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான மாற்றுத்திறனாளிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகிறது. நிபந்தனைகள் மற்றும் கல்வித்தகுதிகள் 1.                  முழுமைய...

• குடியாத்தம் நகராட்சி, ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் ஆய்வு.

Image
குடியாத்தம் நகராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து வேலூர் மாவட்ட ஆட்சி தலைவர் ஆய்வு.                 வேலூர் மாவட்டம், குடியாத்தம் நகராட்சியில் பேருந்து நிலைய கட்டுமான பணிகள், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி குளேரினேசன், குப்பைகள் தரம் பிரித்து வழங்குவது, குடியாத்தம் ஊராட்சி ஒன்றியத்தில் ஆரம்ப சுகாதார நிலையம் ஆகிய இடங்களில் வேலூர் மாவட்ட ஆட்சி தலைவர் பி.எஸ்.லீலாஅலெக்ஸ் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.   மாவட்ட ஆட்சி தலைவர் குடியாத்தம் நகராட்சி, குடியாத்தம் பழைய பேருந்து நிலையத்தில் ரூ.95 இலட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் வணிக வளாகம், பேருந்து நிலையத்தின் தரைதளம், மின்விளக்குகள், கால்வாய் போன்றவற்றின் பணிகளை   பார்வையிட்டு அய்வு செய்தார். மேலும், பாலூட்டும் தாய்மார்கள் அறை, கழிவறைகள் பராமரிப்பு குறித்து   பார்வையிட்டு ஆய்வு செய்தார்.                  தொடர்ந்து குடியாத்தம் நகராட்சி, ச...

• புரட்டாசி 3-வது சனிக்கிழமை.

Image
·          வேலூர் திருமலை திருப்பதி தேவஸ்தான ஆலயத்தில் புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமையை முன்னிட்டு ஸ்ரீ வெங்கடேச பெருமாளுக்கு வெள்ளிக்கவசம் ராஜ அலங்காரம்     ·          பக்தர்கள் காலை துவங்கி இரவு   வரையில் தொடர் அன்னதானம் லட்டு பிரசாதமும் வழங்கப்படுகிறது   ·          ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் .   ·          வேலூர் ஜலகண்டீஸ்வரர் ஆலயத்தி ல்   பெருமாள் ராஜஅலங்காரத்தில் காட்சி.              வேலூர் மாவட்டம் , வேலூரில் உள்ள திருமலை திருப்பதி தேவஸ்தான ஆலயத்தில் புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமையை முன்னிட்டு ஸ்ரீ வெங்கடேச பெருமாளுக்கு வெள்ளிக்கவசம் அணிவிக்கப்பட்டு மலர் மாலைகளால் சிறப்பு அலங்காரங்களையும், ராஜ அலங்காரத்தினையும் செய்து மகாதீபாராதணைகள் நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்த...