Posts

• மழை வெள்ள பேரிடர் - தீயணைப்பு துறையினர் ஒத்திகை.

Image
 ·          மழை வெள்ள பேரிடர் காலங்களில் பாதுகாப்பு கருவிகளை பயன்படுத்தி இடர்பாடுகளில் சிக்கியவர்களை மீட்பது குறித்து தீயணைப்பு துறையினர் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஒத்திகை           வேலூர் மாவட்டம் , சத்துவாச்சாரியில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாவட்ட ஆட்சியர் லீலா அலெக்ஸ் தலைமையில் மழை வெள்ளங்களிலும் கட்டிட இடிபாடுகளிலும் சிக்கியவர்களை மீட்பது குறித்து வேலூர் தீயணைப்பு துறை சார்பில் விழிப்புணர்வு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.       இதில் மழை வெள்ளங்களிலிருந்து மக்கள் எவ்வாறு தங்களை பாதுகாத்து கொள்வது, மேலும் மரங்களை மரம் வெட்டும் கருவி மூலம் எவ்வாறு வெட்டி அகற்றி கட்டிட இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்பது காற்று குறைவான பகுதிகளில் ஆக்சிஜன் செலுத்தி மக்களை எவ்வாறு மீட்பது என்பது குறித்து மாவட்ட தீயணைப்பு துறை அதிகாரி வடிவேல் மக்களுக்கு விளக்கி கூறினார் . இதனை திரளான பொதுமக்கள் பார்த்து பயனடைந்த...

• வேலூர் சிஎம்சி 11-வது சர்வதேச செல், மரபணு சிகிச்சை மாநாடு.

Image
 ·          சிஎம்சி வேலூரில் 11- வது சர்வதேச செல் மற்றும் மரபணு சிகிச்சை மாநாடு.     வேலூர் மாவட்டம், வேலூர் சிஎம்சி-ன் Centre for Stem Cell Research (CSCR) சார்பில் 11- வது சர்வதேச செல் மற்றும் மரபணு சிகிச்சை மாநாடு (CGTCON 2026), அக்டோபர் 8 முதல் 10- ஆம் தேதி வரை சிஎம்சி, பாகாயம் வளாகத்தில் நடைபெறுகிறது .           BRIC–Institute for Stem Cell Science and Regenerative Medicine (inStem), பெங்களூரு மற்றும் Christian Medical College (CMC), வேலூர் ஆகியவற்றின் கூட்டு முயற்சியாக செயல்பட்டு வரும் CSCR இந்த மாநாட்டை நடத்துகிறது .      மாநாட்டிற்கு முன்னதாக , அக்டோபர் 8- ஆம் தேதி தொழில்நுட்பப் பயிலரங்கம் நடைபெறுகிறது . தொடர்ந்து அக்டோபர் 9 மற்றும் 10- ஆம் தேதிகளில் பிரதான மாநாடு நடைபெறும் . இந்தியா மற்றும் பல்வேறு நாடுகளை சேர்ந்த விஞ்ஞானிகள் , மருத்துவர்கள் , தொழில்துறை நிபுணர்கள் , ஆராய்ச்சியாளர்கள் மற்றும் ஒழுங்குமுறை அமைப்புகளின...

• CMC STEM CELL - CGTCON 2026.

Image
·          Centre for Stem Cell Research to Host the 11th International Cell and Gene Therapy Conference (CGTCON 2026).              Centre for Stem Cell Research to Host the 11th International Cell and Gene Therapy Conference (CGTCON 2026). On October 9th and 10th at the CMC Vellore Bagayam Campus.            The Centre for Stem Cell Research (CSCR), a collaborative unit of BRIC-Institute for Stem Cell Science and Regenerative Medicine (inStem), Bengaluru, and Christian Medical College (CMC), Vellore, will host the 11th International Cell and Gene Therapy Conference (CGTCON 2026) from 8th to 10th October 2026 at the New Examination Building, CMC Vellore, Bagayam Campus. A pre-conference workshop will be held on 8th October 2026 to enhance participants’ technical knowledge and skills, followed by the main conference on 9th and 10th October 2026, from 8.00 ...

• வி.ஐ.டி. போபால் பல்கலைகழக 7-ம் ஆண்டு பட்டமளிப்பு விழா.

Image
                               

• VIT Bhopal University - 7th annual convocation.

Image
             

• முதல்வர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள்.

Image
·          முதல்வர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகளில் மாவட்ட அளவில் வென்ற வீரர், வீராங்கனைகளுக்கு ஆட்சியர் பதக்கங்களை வழங்கி பாராட்டினார்.              வேலூர் மாவட்டம் , வேலூர், காட்பாடியில் தமிழ்நாடு அரசு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் முதல்வர் கோப்பைக்கான பல்வேறு விளையாட்டு போட்டிகள் கடந்த மாதம் 9- ஆம் தேதி துவங்கி நடைபெற்றது.       இதில் ஹாக்கி, வாலிபால் , ஈட்டி எறிதல், ஓட்டபந்தயம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல் உள்ளிட்ட பல்வேறு வகையான போட்டிகள் நடத்தப்பட்டது. இதில் வென்றவர்களுக்கு வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் லீலாஅலெக்ஸ் பதக்கங்கள், சான்றுகளை வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு வழங்கி பாராட்டினார். இவ்விழாவில் திரளான மாணவ, மாணவிகள், பெற்றோர்கள், விளையாட்டு பயிற்சியாளர்கள் கலந்து கொண்டனர்.  

• சித்த மருத்துவ மாணவர்களுக்கு நாடி பார்ப்பது குறித்து பயிற்சி.

Image
·          நாடு முழுவதும் சித்த மருத்துவமனைகளை தனியாக தனியார் அமைக்க தற்போது தேசிய சித்த மருத்துவ நிறுவனம் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது ·          சித்த மருத்துவம் பயின்ற மாணவர்களுக்கு நாடி பார்ப்பது குறித்து ஏலகிரியில் 300- பேருக்கு அக்டோபர் 11 முதல் 20 ஆம் தேதி வரையில் பயிற்சி அளிக்கப்படும்   ·          நாடு முழுவதும் சித்தா மருத்துவ லேப் பரிசோதனை மையங்களை ஏற்படுத்தி வருகிறோம் - தேசிய சித்த மருத்துவ இயக்குநர் டாக்டர் செந்தில்குமார் வேலூரில்   பேட்டி.              வேலூர் மாவட்டம் , வேலூரில், சண்முகனடியார் சங்க கட்டிடத்தில் புற்று மகரிஷி சமூக மருத்துவ மையம் மற்றும் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மற்றும் தேசிய சித்த மருத்துவ நிறுவனம் இணைந்து சித்த மருத்துவ முகாம் வணிகர் சங்க மாவட்ட தலைவர் ஞானவேலு தலைமையில்   நடைபெற்றது.  ...